அகத்திணையியல்--நூற்பா எண் 208829

என
 

 

என்றதூஉம் எனக் கொள்க.

     [ஆறாம் அவத்தையின் மேம்பட்ட பெருந்திணைத் தலைவி நிலையை
‘ஏறிய மடல் திறம்’ (இ.வி.பொ. 219) என்ற நூற்பா உரை விளக்கத்துள்
காண்க.]

     இனி, அன்னபிறவாவன, புகுமுகம்புரிதற்கண் தலைமகன் நோக்கியவழி
ஒருவல்லிப் பொதும்பரானும் மற்றொன்றானும் சார்பு பெற்று மறைதலும்,
அவை இல்லாதவழி இடர்ப்படுதலும் என்றாற்போல்வன அடங்குதலும்,

    நகுநயம் மறைக்குங்கால் இதழ்மொக்குளுள் தோன்றுவது நகை
எனப்படாது அதன்பாற் படுதலும்,

    அமர்த்து நோக்காது அலமர நோக்குதலும் நிலங்கிளைத்தலும்
சிதைவுபிறர்க்கு இன்மைக்கண் அடங்குதலும் முதலியனவாம்.
 

விளக்கம்


     ‘அன்ன பிறவும் அவற்றொடு சிவணி
      மன்னிய வினைய நிமித்தம் என்ப.’

தொல்.பொ. 267


என்ற நூற்பாவிற்குப் பேராசிரியர் உரைத்தனவற்றுள் சில இவை.

    புகுமுகம் புரிதல் முதலிய மெய்ப்பாடுகளில் சிலவற்றைச் சார்ந்து
தொடர்புடைய சில நிலைகள் ஏற்படும் என்பது விளக்கப்படுகிறது.

     தலைவன் நோக்கியவழித் தலைவி நாணத்தால் ஒரு கொடியைச்
சார்தலும், சார்பு இல்வழி இடர்ப்படுதலும் போல்வன இயற்கைப்புணர்ச்சி
விரியில் விளக்கப்பட்டுள்ளன.

    சிரிப்பைத் தலைவி அடக்கிக் கொண்டாலும், அவள் சிரிப்பது கண்ணும்
முகனும் கொண்டு உணரப்படும் ஆயி