‘இனிது .... ..... முகனே’
--
கற்புக்காலத்துத் தலைவி தலைவனோடு இல்லறம் நடத்தியகாலை
அவள்
சமைத்த உணவை அவள் கணவன் ‘இனிது’ என்று கூறிச் சுவைத்து
உண்டமையின், தனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிச் சிரிப்பை வெளிக்காட்டாது
முகவேறுபாட்டால் குறிப்பாக அவள் காட்டியமை நகுநயம் மறைத்தற்கு
எடுத்துக்காட்டாகும்.]
இன்னும் அதனானே,
இன்பத்தை வெறுத்தல்1 துன்பத்துப் புலம்பல்2
எதிர்பெய்து பரிதல்3 ஏதம் ஆய்தல்4
பசிஅட நிற்றல்5 பசலை பாய்தல்6
உண்டியின் குறைதல்7 உடம்புநனி சுருங்கல்8
கண்துயில் மறுத்தல்9 கனவொடு மயங்கல்10
பொய்யாக் கோடல்11 மெய்யே என்றல்12
ஐயம் செய்தல்13 அவன்தமர் உவத்தல்14
அறன்அளித்து உரைத்தல்15 ஆங்குநெஞ்சு அழிதல்16
எம்மெய் ஆயினும் ஒப்புமை கோடல்17
ஒப்புவழி உவத்தல்18 உறுபெயர் கேட்டல்19
நலத்தக நாடின் கலக்கமும்20 அதுவே.
எனவும்,
1 இன்பத்தை வெறுத்தல் :
யாழும் குழலும் சாந்தும் முதலாக இன்பத்திற்கு ஏதுவாகிய பொருள்
கண்டவழி அவற்றின்மேல் வெறுப்புத் தோன்றுதல். அது,
‘கல்லாக் கோவலர் ஊதும்
வல்வாய்ச் சிறுகுழல் வருத்தாக் காலே.’
அகநா. 74
எனவரும். |