[தலைமகன் பிரிவின்கண்
அழிந்த கிழத்தி வற்புறுத்தும் தோழிக்கு
உரைத்த
பாடற்பகுதி இது. பொருள் வருமாறு :
‘தோழி! பொருள்வயின் பிரிந்த தலைவன் கார்காலத்தில்
ஆண்மான்கள்
பெண்மான்களோடு கூடித் திளைக்கும் வழியில் உன்னை
நினைத்துப்
பாகனைக்கொண்டு திண்ணிய தேரைச்செலுத்தி இன்றே வந்து
விடுவான்; ஆதலின். கண்ணீர் உகுத்தலை நீக்குவாயாக என்று வற்புறுத்தும்
உன்கூற்றினை ஏற்று ஆற்றி இருப்பேன். தலைவன் உடன் உறைந்த
காலத்தில் இன்பம் தந்தன இன்று என் துயரத்தை மிகுக்கின்றனவே! துன்பந்
தரும் மாலைக்காலத்தில் வளைந்த கோலை ஏந்தி வரும் மேய்த்தல், குழல்
ஊதுதல் இவற்றையன்றிப் பிறதொழிலைக் கற்காத இடையர்கள் ஊதும்
கொடிய வாயினை உடைய சிறிய குழல் தன் ஓசையால் என்னை
வருத்தாவிடின், நின் விருப்பப்படி ஆற்றுதல்கூடும்.’
இத்தலைவி கூற்றில் தலைவன் பிரிவின்கண் வேய்ங்குழல் இசையாகிய
இன்பத்தைத் தலைவி வெறுத்தமை
போதருதல் காண்க.]
2 துன்பத்துப் புலம்பல்:
பிரிவு ஆற்றாது துன்புறுங்கால் அவ்வாற்றாமை தலைமகற்கு இன்றித்
தானே துன்புறுகின்றாளாகச்
சொல்லுதல். அது,
‘நின்னுறு விழுமம் களைந்தோள்
தன்னுறு விழுமம் நீந்துமோ எனவே.’
அகநா.170
எனவரும்.
[தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியால் அலவனைத் தூதுவிட
நினைத்து சொற்ற பாடற்பகுதி இது.
105 |