834இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

      “அலவனே! கானலோ, கழியோ, புன்னையோ என்துயரைத்
தலைவனிடம் கூறா. உன்னையன்றி என் துயர் தீர்க்கும் துணை இல்லை.

வண்டினம் பறந்து கிளரும் தலைவனிடம் சென்று ‘கடல் சிறு காக்கை தன்
விருப்பத்திற்கு உரிய பெடையோடு சுறாமீன் வழங்கும் வேட்டை நீங்கிய
கடற்பகுதியில் வெள்ளிய இறாமீனைக் கனவு காணும் செறிந்த
இடையாமத்தில் உன்னுடைய மிக்க துயரத்தை இரவுக்குறிக்கண் வந்து
நீக்கிய தலைவி, இன்று நீ பிரிந்து மறந்திருத்தலால், தனக்கு ஏற்பட்டுள்ள
பெருந்துன்பத்தைக் கடத்தல் இயலுமோ?’ என்று நீயே சொல்லுதல்
வேண்டும்.”

      தலைவன், பிரிவை வரவேற்பதாகவும், தானே பிரிவால் துயர்
உறுவதாகவும் தலைவி கூறுவது இதன்கண் உணரப்படும்,]

3  எதிர்பெய்து பரிதல்:


   உருவெளிப்பாடு. அது தலைமகனையும் அவன் தேர் 

   முதலாயினவற்றையும் தன்எதிர் பெய்துகொண்டு பரிந்து உரைத்தல் அது,

     ‘வாரா தாயினும் வருவது போலச்
     செவிமுதல் இசைக்கும் அரவமொடு
     துயில்மறந் தனவால் தோழிஎன் கண்ணே.’

குறுந். 301

எனவரும்.

      [‘வரைவிடை வைப்ப ஆற்றுகிற்றியோ ?‘ என்ற தோழிக்குத் தலைவி சொல்லிய பாடற்பகுதி இது.

      ‘முழாப் போன்ற அடிமரத்தை உடைய வளைந்த நிலையை உடைய
பனையின் கொழுவிய மடலிடை அமைத்த கூட்டில் தன் விருப்பத்திற்குரிய
முதற்சூலான் வேட்கையுற்ற அன்றிலின்பெடை ஆண்அன்றிலைக் கூவி
அழைக்கும் நடுஇரவிலே