அகத்திணையியல்--நூற்பா எண் 208835

தன
 

தன் சக்கரத்தால் மன்றத்தைப் பிளந்துகொண்டு விரைந்து வரும்
தலைவனுடைய நெடிய தேர் உண்மையில் வாராதாயினும் என் கலக்கத்தால்
வருவதுபோல எனக்குக் காட்டி என்காதுகளில் ஒலிக்கும் ஒலியினால்

என்கண்கள் உறங்குதலை மறந்தன.’

     இதன்கண், தலைவி தன் காதல்மிகுதிபற்றிய எண்ணத்தால் தலைவனது
தேர் வருவதுபோலக் கருதிக்கொண்டு வருந்தியவாறு காண்க. ]

4  ஏதம் ஆய்தல்:


   கூட்டத்திற்கு வரும் இடையூறு உண்டு என்று பலவும் ஆராய்தல். அது
   ‘நொதுமலர் வரையக் கருதுவர் கொல்?’ எனவும், ‘பிரிந்தோர் மறந்து
   இனிவாரார் கொல்?’ எனவும், தோன்றும் உள்ளநெகிழ்ச்சி. அது,

     ‘வாரர் கொல்எனப் பருவரும்
      தாரார் மார்பநீ தணந்த ஞான்றே.’

அகநா.150

எனவரும்.

      [பகற்குறி வந்து கண்ணுற்று நீக்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து செறிப்பு அறிவுறீஇ வரைவு கடாய பாடற்பகுதி இது.

      “தலைவ! தலைவியின் கூந்தலும், சுணங்கும், நகிலும் நோக்கி அவள்
பெருவனப்பினள் ஆகியதைப் பலபடியாகக் கூறித் தழுவி
இற்செறிந்துவிட்டாள் யாய். சுறாமீன் வழங்கும் பெருந்துறையில் மாலையில்
கூம்பிய நெய்தலும் குவளையும் செருந்தியும் காலையில் மலரும்
கழிகளையும், கடற்கரைச் சோலைகளையும் காணுந்தோறும் பலவும் எண்ணி
வெறுத்துத் ‘தலைவர் இனிவாராரோ?’ என்று நின் சிறுபிரிவிற்கே வருந்தும்
தலைவி இற்செறிக்கப்பட்டமையான் எந்நிலையள் ஆவளோ?”