பொருள் இவ்வுலகில் வேறு
ஒன்றும் இல்லை. அவளோடு பிரிவின்று
இயைந்த துவரா நட்பினை உடைய என்சொற்களையும் அவள் கேட்டலை
மறுக்கிறாள். இந்நிலையால் பின் நிகழப் போவது யாதோ?‘ என்ற தோழி
கூற்றில், தலைவி உணவுஉண்டலை வெறுப்பால் குறைத்துக்கொண்டமை
அறிவுறுத்தப்பட்டவாறு. ]
8 உடம்பு நனி சுருங்கல்
அவ்வுண்ணாமை உயிரில் செல்லாது உடம்பில் காட்டுதல்.
‘தொடிநிலை நெகிழச் சா அய் தோள் அவர்
கொடுமை கூறிய ஆயினும் கொடுமை
நல்வரை நாடற்கு இல்லை தோழி
நெஞ்சில் பிரிந்ததும் இலரே
குன்ற நோக்கம் கடிந்தததும் இலரே.’
னுன வரும்,
[‘உடம்பும் உயிரும்
வாடியக் காலும்
என்உற் றனகொல் இவைஎனின் அல்லதைக்
கிழவோற் சேர்தல் கிழத்திக்கு இல்லை’
தொல். பொ. 203
என்ற பண்பினளாகிய தலைவி தான் வாடியக்காலும் தலைவனைத் தோழியிடம் இயற்பட
மொழிகிறாள்.
‘தொடி தான் அணியப் பட்ட நிலையினின்றும் நெகிழுமாறு தோள்கள்
நுணுகித் தலைவர் பிரிவால் தமக்கு ஏற்பட்ட கொடுமையைக் குறிப்பால்
தெரிவிக்கின்றன எனினும், என் கருத்தில் தலைவரிடம் கொடுஞ்செயல் ஏதும்
இன்று என்பதே உறுதியாகிறது. தம் மலையைக் கண்டு ஆறுதல் அடையும்
நிலையைத் தந்திருக்கும் அவர் என் நெஞ்சின் உள் இருந்து பிரியாது, யான்
ஆற்றி இருத்தலைச் செய்கிறார்’ என்ற தலைவி கூற்றில், தோள்கள் தொடி
நெகிழ நுணுகின
|