அகத்திணையியல்--நூற்பா எண் 208839

என
 

என்பதனால் தலைவன்பிரிவின்கண் தலைவியின் உடம்பு நனிசுருங்கியது
புலப்படுத்தப்பட்டவாறு. ]

9   கண்துயில் மறுத்தல்:


    இரவும் பகலும் துஞ்சாமை. அது,

     ‘புல்குரல் ஏனல் புழையுடை ஒருசிறை
     மலர்தார் மார்பன் நின்றோற் கண்டோர்
     பலர்தில் வாழி தோழி அவருள்
     ஆர்இருள் கங்குல் அணையொடு பொருந்தி
     ஓர்யான் ஆகுவது எவன்கொல்
     நீர்வார் கண்ணொடு நெகிழ்தோ ளேனே.’

அகநா. 82

எனவரும்.

     [தலைவி தோழிக்கு அறத்தொடு நின்ற இப்பாடலில் ‘மயில் ஆடு களம் புக்க விறலிபோலக் காட்சியளிக்கும் மலைநாட்டுத் தலைவன் ஏனற்புனத்து வாயிற்புறம் வந்து நின்றானாக, அவனைக் கண்டவர் பலராவர். அவருள்ளும், செறிந்த இருளை உடைய இரவிலே தலையணைகொண்டு படுக்கவும், நீர் நிரம்பிய கண்ணோடு யான் ஒருத்திமாத்திரம் தோள்கள் நெகிழ உறக்கம் அற்றவளாய் உள்ளேனே’ - என்ற தலைவி கூற்றில், அவள் பிரிவுத்துயர் ஆற்றாது உறக்கம் நீத்துக்கிடந்த பெற்றி
உணர்த்தப்பட்டது.]

10  கனவொடு மயங்கல்:


   அரிதினில் துயில் எய்தியவழித் தலைமகனைக் கனவில் கண்டு பின்னர்
   அவன் அன்மையின் மயங்கும் மயக்கம். அது,

     ‘அலந்தாங்கு அமையலேன் என்றானைப் பற்றிஎன்
      நலந்தாரா யோஎனத் தொடுப்பேன் போலவும்