கலந்தாங் கேஎன் கவின்பெற
முயங்கிப்
புலம்பல் ஓம்புஎன அளிப்பான் போலவும்.’
கலி.128
எனவரும்.
[ வரைவு இடை ஆற்றளாய்ச் செல்கின்ற தலைவியது கவின் கண்டு
வினாய
தோழிக்கு அவள் தான் கண்ட கனவு நிலை உரைத்த இப்பாடலில்,
தலைவி
பிரிவின்கண் கனவு கண்டது ஒன்றே கொள்ளற்பாலது. கனவில்
கண்ட
தலைவன் நனவில் இன்மையின் மயங்கிய மயக்கம் இப்பாடற்கண்
இன்று.
“நின்னைப் பிரிந்தஇடத்து வருந்தி உயிர் வாழேன்’ என்று கூறினவனைப்
பிடித்துக் கொண்டு’ நீ கொண்ட என் நலத்தை இனித்தாராய்’ என்று
வளைத்துக் கொள்வேன் போலவும், அவ்விடத்தே என்னுடைய கழிந்த
அழகை யான் பெறும்படி புல்லிக் கூடி ‘இனி வருந்தாதேகொள்’ என்ற கூறி
என்னையும் அளிப்பான் போலவும் நான் கனவில் கண்டேன்” என்று
தலைவி தோழிக்குத் தலைவன்பிரிவிடை அவன் வருகையைக்
கனவில்
கண்டமையைச் சொற்றவாறு]
11 பொய்யாக் கோடல்:
மெய்யைப் பொய்யாக் கோடல். அது,
‘கனவினான் எய்திய செல்வத்து அனையதே
ஐய எமக்குநின் மார்பு.’
கலி. 68
எனவரும்.
[பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைவனோடு ஊடிய காமக்கிழத்தி
தன்
காதல் மிகுதி கூறி ஊடியவாறு கண்டு சென்று சேர்ந்த தலைமகனுடன்
ஊடல்
தீர்கின்றாள் கூறிய பாடலின் சுரிதகப்பகுதி இது.
“புனல் ஊர! நின் பரத்தையர் நின் இருக்கை காண எம் வீட்டு
வாயிற் கதவைப் புடைக்கின்றனர். இற்பரத்தை |