அகத்திணையியல்--நூற்பா எண் 208841

 

யரை ஊடவிட்டுச் சேரிப்பரத்தையர் தொடர்பு கொள்கின்றாய்’ என்ற அலர்
பரவியுள்ளது. சேரியில் நீ சென்ற வீட்டை வினவி நின் பாகன்
தடுமாறுகிறான்.

     எம்மனையின்கண்ணே நீ ஒரு காலத்து வந்தாயாயின் நின்னைப்
பெற்று மகிழ்ந்து நீ நீங்கிய பின் எம்மெலிவு கண்டு ஊரவர் நின்னை
அலர்தூற்ற, யாம் பழைய வனப்பைப் பெறுதற்கு மீண்டும் ஒருகால்
நின்னைத் தழுவும் வாய்ப்புக்கிட்டினும், உண்மையில் மனம் ஒன்றாது

வேறாயிருக்கும் நீ விரும்பாத நின் மார்பிடத்து எம் தழுவுதல் எமக்குக்
கனவின்கண் வரப்பட்ட செல்வத்தை ஒப்பதேயாகும்” என்ற கூற்றில்,

    உண்மையில் தலைவனை முயங்கப் பெறினும் அதனைக் கனவு போலக்
கூறுதல் பொய்யாக் கோடலாம்.]

12  மெய்யே என்றல்:


    பொய்மை மெய் என்று துணிதல். அது,

    ‘கழங்குஆடு ஆயத்து அன்றுநம் அருளிய
    பழங்கண் ணோட்டமும் நலிதர
    அழுங்கினன் அல்லனோ அயர்ந்ததன் மணனே.’

அகநா. 66

எனவரும்.

     [தலைவன் புதல்வனை வாயிலாகக்கொண்டு தலைவியின் ஊடல்
தீரத்து அவளைச் சேர்ந்தான் ஆயினும், அவன் பரத்தையரை வதுவை
செய்தற்குத் தேர் ஏறிப் புத்தணியுடன் வீதிவழியே சென்றகாலைத்
தன்புதல்வன் தன் செலவைத் தடுத்தலால் தான் பரத்தையை வதுவை
செய்யச் சேறலை விடுத்து வீட்டிற்குள் புதல்வனோடு வந்துவிட்டான்
எனவும்,
106