அகத்திணையியல்--நூற்பா எண் 208843

14 அவன
 

14  அவன் தமர் உவத்தல்: அஃது,

     ‘ஊரன் ஊரன் போலும்
     தேரும் பாணன் தெருவி னானே.’


எனவரும்.

     [தலைவன் ஊர்மக்களையாவது ஊர்ப்பொருளையாவது கண்டக்கால்
தலைவனிடத்துக் கொண்ட பாசத்தால் அவன் தொடர்புஉண்மை பற்றி
மகிழ்ந்து கூறிச் செயற்படுவது.

      ‘தெருவில் பலரையும் ஆராய்ந்து கொண்டு திரியும் பாணன் நம்
தலைவனுடைய ஊரினன் போலும்’ என்று தெருவில் போகும்
பாணனிடத்தும் பரிவு காட்டுதற்கு உரிய மெய்ப்பாடு இது.

     ‘அம்ம வாழி தோழி அன்னைக்கு
      உயர்நிலை உலகமும் சிறிதால் அவர்மலை
      மாலை தந்த மணம் கமழ் உந்தியொடு
      காலை வந்த காந்தள் முழுமுதல்
      மெல்லிலை குழைய முயங்கலும்
      இல்உய்த்து நடுதலும் கடியா தோளே.’

குறுந். 361


      ‘தலைவனுடைய மலையிலே மாலையில் பெய்த மழையால் நறுமணம்
கமழும் ஆற்றோடு காலையில் இங்கு வந்த காந்தளினது மெல்லிய இலை
குழையும்படி தழுவுதலையும் வீட்டில் கொணர்ந்து அதன் கிழங்கை
நடுதலையும் தடுக்காதவளாகிய நம் தாய் செய்த நன்றிக்குத் தேவர்
உலகமும் கைம்மாறு ஆகாது.’ - இப்பாடலில் தலைவன் மலையினது
தொடர்பு கொண்ட காந்தள்செடியிடத்துத் தலைவி கொண்ட விருப்பம்
புலனாகும். இதனையும் அவன்தமர் உவத்தலுக்குப் பேராசிரியர்
எடுத்துக்காட்டாகத் தந்துள்ளார். ]

15  அறன்அளித்து உரைத்தல்:

   அறக்கிழவனை அன்பு செய்தல். அது,