‘பாங்கர்ப் பல்லி படுதொறும்
பரவிக்
கன்றுபுகு மாலை நின்றோள் எய்தி’
அகநா. 9
எனவரும்.
[வினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லிய
இப்பாடலில், ‘நாம் தலைவியைக் காணும் வேட்கையில் கதிரவன்
மறைவதாயினும் கவலாது, ஊர் சேணிடையது என்றும் நிலையாது, விரைந்து
செல்லும் குதிரைகளை இன்னும் விரைவித்தவாறு ஊர்சேரும்போது, தலைவி
பல வளங்களும் பொருந்திய நம் வீட்டில் ஒருபக்கலில் தங்கிக் கன்றுகளை
உன்னிப் பசுக்கள் வீட்டை நோக்கிவரும் மாலையில் தெய்வத்தை நம் வரவு
குறித்து வழிபட்டவாறு நின்று, பல்லி நல்ல பக்கத்தில் ஒலிக்குந்தோறும்
அந்நன்னிமித்தத்தைக் காட்டிய தெய்வத்தைப் போற்றிக்கொண்டிருப்பாள்’
என்ற பகுதியில் தலைவி அறன் அளித்து உரைத்தல் பெறப்பட்டவாறு.]
16 ஆங்கு நெஞ்சு அழிதல்:
அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சு அழிந்து உரைத்தல். அது,
‘பழிதபு ஞாயிறே பாடுஅறியா தார்கண்
கழியக் கதழ்வை எனக்கேட்டு நின்னை
வழிபட்டு இரக்குவென் வந்தனென் என்நெஞ்சு
அழியத் துறந்தானைச் சீறுங்கால் என்னை
ஒழிய விடாதீமோ என்று.’
கலி. 143
எனவரும்.
[ தலைவன் களவொழுக்கத்திடையே நண்பனுக்கு உற்றுழி உதவ
வாளான்
எதிரும் பிரிவு கருதிப் பிரிந்து பன்னாள் அருமை செய்து
அயர்த்தானாக,
தலைவி கையறவு உரைக்கும் நிலையையும் கடந்து, மன்றத்து
இருந்த
சான்றவர் அறியத் |