அகத்திணையியல்--நூற்பா எண் 208845

தன
 

தன் தலைவன் பெயரும் பெற்றியும் பிறவும் கூறியும் அழுதும் அரற்றியும்
பொழுதொடு புலம்பியும் அறிவு அழிகுணன் உடையளாயின பெருந்திணை
நிலையில் ஞாயிற்றை நோக்கிக் கூறுவது இது.

     “குற்றமற்ற சூரியனே! ‘உலகியல் அறியாதார் இடத்துக் கழியச்
சீறுதற்கு விரைந்து செல்வை’ என்று இவர்கள் கூறக்கேட்டு நின்னை

வழிபட்டு நீ என் தலைவனை மிகச் சீறாத படி இரந்து கொள்வேனாக
வந்தேன். நீ என் நெஞ்சம் கெடும் படி என்னைக் கைவிட்டவனைச்
சீறுமிடத்து என்னை நீங்கவிடாதேகொள்" -- என்று தலைவி பிரிவுத்துயர்
தாங்காமல் நெஞ்சு ஒடிந்து இறத்தலை வரவேற்றவாறு. ]

17  எம்மெய் ஆயினும் ஒப்புமைகோடல்:

    யாதானும் ஒருபொருள் கண்டஇடத்துத் தலைமகனோடு ஒப்புமை கோடல். அது,

     ‘கணைகழி கல்லாக் கல்பிறங்கு ஆரிடைப்
     பணைஎருத்து எழிலேற்றின் பின்னர்ப்
     பிணையும் காணீரோ பிரியுமோ அவையே.’ ]

கலி. 20

எனவரும்.

      [பிரிவு உணர்த்திய தலைமகனுக்குத் தலைவி ‘எம்மையும்

உடன்கொண்டு சென்மின்’ என்றாளை நோக்கித் தலைவன் கானின்

கடுமையும் அவள் மென்மையும் கூற, அதுகேட்ட அவள் நாளது சின்மையும்

இளமையது அருமையும் கூறி ‘எம்மையும் உடன்கொண்டு சென்மின்’ என்று

வேண்டிய இப்பாடல் சுரிதகத்தில்,

     ‘காடு நீ அணைவதற்கு அரிய வெம்மையை உடையது என்று
என்னிடம் கூறும் தலைவரே! பெருக்கும் கல்லின் நெருக்கத்தால் எய்த
அம்பு ஓடாத அரிய வழியிடத்துப் பெருமையை உடைய கழுத்தினையும்
அழகையும் உடைய