ஏற்றின் பின் நீங்காமல்
திரியும் பிணையைக்காணது இருக்க வல்லீரோ ?
அவை நீர் அறியப் பிரியாவே; ஆதலின் எம்மையும் உடன்கொண்டு
சென்மின்;’
என்று தலைவி தலைவனை வேண்டுதற்கண், அஃறிணைப்
பொருள்களை உவமம் கூறித் தன்னையும் அவைபோலக் கருதுமாறு
வேண்டுதல் எம்மெய்
ஆயினும் ஒப்புமை கோடலாம்.]
18 ஒப்புவழி உவத்தல்:
ஒப்புமை உண்டாகிய வழியே உவமை கொண்டதனானே உவகை
தோன்றுவது. அது,
‘காமரு நோக்கினை அத்தத்தா என்னும்நின்
தேமொழி கேட்டல் இனிதுமற்று இன்னாதே’
கலி. 80
எனவரும்.
[பரத்தையிற் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி
தன்
மகனுக்கு உரைக்கும் இப்பாடற் பகுதியில், “ ஐய! விருப்பம் மருவுகின்ற
அழகினை உடையாய்! ‘அத்தா! அத்தா!’ என்று கூறும் நினது இனிய
மொழியைக் கேட்டு மகிழ்ந்திருத்தல் இனிது. அஃது ஒழிந்து நுந்தை மகளிர்
நலம் சாய்தற்கு அவர் நலத்தை உண்கையினாலே உய்வின்றிச் சாய்ந்துற்ற
எவ்வத்தைத் தரும் நோயை யாம் காணுமிடத்து அக்காட்சி இன்னாது”
என்று
கூறும் கூற்றில், தன் மகன் அவன் தந்தையைப் போல அழகனாக
இருப்பது ஆகிய ஒப்பினைக் கண்டு தலைவி உவந்தவாறு. ]
19 உறுபெயர் கேட்டல்:
தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல். அது,
‘பலவின் பழத்துள் தங்கும்
மலைகெழு வெற்பனைப் பாடுகம்வா வாழி தோழி.’
கலி. 41
எனவரும். |