[‘இடியோடு இரவில் மழை பெய்த
நடுஇரவிலே மின்னல் ஒளியிலே
பெண்யாணையோடு மேயும் ஆண்யானையின் அடி ஓசை கேட்ட கானவன்
பலாமரத்துமேல் அமைந்த பரண் மீது ஏறி விசையாகக் கவண் கற்களை
வீச,
அக்கவண்கற்கள் வேங்கைப் பூக்களைச் சிதறி, பழுத்த பலாக்கனிகளை
உதிர்த்து, தேன் கூடுகளைத் துளைத்து, மாந்துணர்களைக் கலக்கி
வாழைமடலைக் கிழித்துப் பலாப்பழத்தினுள் சென்று தங்கும் பக்கமலைகள்
பொருந்திய நம்தலைவனைப் பாடுவோம்’ என்ற பகுதியில், ‘தலைவன்
வளஞ்சான்ற நாட்டுத் தலைவன்’ என்று அவன் புகழ்பாடித் தலைவி
மகிழ்தல் புலனாயவாறு.]
20 கலக்கம்:
சொல்லத்தகாதன சொல்லுதல். அது,
‘பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய
கையுளே மாய்ந்தான் கரந்து.’
கலி. 142
எனவும்,
‘பிறங்குஇரு முந்நீர் வெறுமணல் ஆகப்
புறங்காலில் போக இறைப்பேன் முயலின்
அறம்புணை ஆகலும் உண்டு.’
கலி. 144
எனவும் வரும்.
[அறிவு அழி குணன் உடையளாய்க் களவுக்காலத்தில் தலைவன்
அருமை
செய்து அயர்த்தலை ஆற்றாத தேறுதல் ஒழித்த காமத்து
மிகுதிறத்துப்
பெருந்திணைத் தலைவி கூற்றின் பகுதிகள் இவை.
‘தலைவன் கனவில் வந்தானாக அவனைக் கையால் பற்றிப் பின்
அவனைக் காண என் கண்களைத்
திறக்க அவன் என் கைக்குள்ளே
மறைந்துவிட்டான்.’
|