அகத்திணையியல்--நூற்பா எண் 208849

முட
 

     முட்டுவயின் கழறல்1 முனிவுமெய் நிறுத்தல்2
     அச்சத்தின் அகறல்3 அவன்புணர்வு மறுத்தல்4
     தூதுமுனிவு இன்மை5 துஞ்சிச் சேர்தல்6
     காதல் கைம்மிகல்7 கட்டுரை யின்மை8 என்று
     ஆயிரு நான்கே அழிவில் கூட்டம்.

எனவும்
,

     [எனவும் என்ற எண்ணும்மை ‘இன்பத்தை வெறுத்தல்’ (பக்கம் 832) என்ற நூற்பாவினோடு இதனை எண்ணிக் கொள்கிறது.]

1  முட்டுவயின் கழறல்:

   தலைக்கூட்டத்திற்கு முட்டுப்பாடு ஆகியவழிக் கழறி உரைத்தல். அது,

    ‘நொச்சி வேலித் தித்தன் உறந்தை
     கல்முதிர் புறங்காட் டன்ன
     பன்முட் டின்றால் தோழிநம் களவே.’

அகநா. 122

எனவரும்.

     [தலைக்கூட்டம்-பகற்குறி இரவுக்குறி ஆகிய இடத்து நிகழும் கூட்டம்.

     தலைமகன் சிறைப்புறத்தானாக தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொற்ற பாடற்பகுதி இது.

     தோழி! ஊர்துஞ்சாமை, தாய்துஞ்சாமை, காவலர் கடுகுதல்,
நாய்குரைத்தல், நிலவு வெளிப்படுதல், கூகைகுழறல், கோழி குரல்காட்டல்,
இம் முட்டுப்பாடுகள் இல்லாத அன்று தலைவன் வாராதிருத்தல் ஆகிய
காரணங்களால் நம் களவு ஒழுக்கம் தித்தன் என்பானது மதிலை
வேலியாகவுடைய