உறையூரைச் சூழ்ந்திருக்கும்
காவற் புறங்காட்டைப் போன்ற பல
முட்டுப்பாடுகளை உடையதாய் உள்ளது’ என்ற கூற்றில் முட்டுவயின் கழறல்
வந்தவாறு.
அழிவுஇல் கூட்டம் - என்றைக்கும் இன்பம் அழிதல் இல்லாது செய்யும்
வரைதலின்கண் உள்ள வேட்கையால் புலப்படுத்தும் மெய்ப்பாடுகளைச் சுட்டுகிறது.]
2 முனிவு மெய்நிறுத்தல்:
தலைமகள் உள்ளத்து வெறுப்பு வெளிப்பட நிற்கும் நிலைமை. அது,
‘இன்னுயிர் கழிவ தாயினும் நின்மகள்
ஆய்மலர் உண்கண் பசலை
காம நோயெனச் செப்பா தீமே.’
அகநா. 52
எனவரும்.
[தான் (தலைவி) வேறுபட்டமை அறிந்த செவிலித் தாய்க்குத் தோழி
அறத்தொடுநிற்கும் என்பதைக் குறிப்பான் அறிந்த தலைவி தோழிக்குச்
சொல்லிய பாடற்பகுதி இது.
‘மலைச்சாரலிலே வேங்கைப்பூக்களை விரும்பிய குறவர் மகளிர்
புலிபுலி என்று கூக்குரலிடப் பசுக்களைக் கவரப் புலியே வந்துவிட்டதாகக்
கருதிய
கானவர், கையில் வில் ஏந்திப் பேரொலியோடு புறப்படும்
மலைநாடனாகிய
தலைவனுடைய மார்பு பற்றியதாக இந்நோய் உள்ளது’
என்ற செய்தியைத்
தாய்க்கு அறிவிப்பேமா? அறிவியேமா? என்று ஐயுற்றுக்
கருதிய எண்ணம்
இப்பொழுது ஒருமுடிவு அடைந்துவிட்டது. என் உயிரே
போவதாயினும் என் தாயிடம் எனக்கு ஏற்பட்டுள்ள இப்பசலைநோய்
காமநோயின் செயலே என்று
கூறாதீர்கள்’ - என்ற செய்தியில், |