அகத்திணையியல்--நூற்பா எண் 208851

 

தலைவி களவொழுக்கத்தை வெறுத்தலான் உயிர் துறப்பதற்கும் துணிந்து
வாழ்க்கையை முனிந்த கருத்துப் புலப்படுத்தப்பட்டவாறு.]

3  அச்சத்தின் அகறல்:

   தலைமகன்கண் வரும் ஏதம் அஞ்சி அவனை நீங்கும் குறிப்பு. அது,

    ‘மன்றுபாடு அவிந்து மனைமடிந் தன்றே
    கொன்றோ ரன்ன கொடுமையோ டின்றே
    யாமம் கொளவரின் கனைஇக் காமம்
    கடலினும் உரைஇக் கரைபொழி யும்மே
    இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம்
    என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு
    இறும்புபட்டு இருளிய இட்டருஞ் சிலம்பின்
    குறுஞ்சுனைக் குவளை வண்டுபடச் சூடிக்
    கானக நாடன் வரூஉம் யானைக்
    கயிற்றுப்புறத் தன்ன கல்மிசைச் சிறுநெறி
    மாரி வானம் தலைஇ நீர்வார்பு
    இட்டருங் கண்ண படுகுழி இயவின்
    இருளிடை மிதிப்புழி நோக்கி அவர்
    தளர்அடி தாங்கிய சென்றது இன்றே.’

அகநா.128


எனவரும்.

    [இரவுக்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாக தலைமகள்
தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லிய பாடல்இது.

     ‘அம்பலங்களில் ஒலி அடங்கியது. இல்லோர் துயின்றனர். கொலை
செய்வது போன்ற கொடுமையுடன் இரவுக் காலம் சிறத்தலினாலே காமம்
கடலைவிடப் பெருகிக் கரை கடந்து செல்கிறது. நாம் இவ்விரவிடைக்
காமக்கடலில் மூழ்கி உயிர் ஊசலாடுகின்ற இந்நிலையில் நம் நல்ல நெஞ்சம்
என்னொடும் நின்னொடும் கலந்து ஆலோசனை செய்யாது,