சிறுகாடுகளாய் இருண்ட
சிறிய செல்லுதற்கு அரிய பக்க மலையின்கண்
உள்ள குறிய சுனைகளில் பூத்த குவளைமலர்களை வண்டுகள்
மொய்க்கும்படிச் சூடிக் காட்டுநாட்டை உடைய நம் தலைவன் இரவுக்குறி
நோக்கி வருகின்ற, யானையின் முதுகில் காணப்படும் கயிறு இடுதலான்
ஏற்பட்ட தழும்பை ஒத்த மலைமீது உள்ள சிறிய வழியாகிய, மேகம் மழை
பெய்தலால் நீர் இடையறாது பொருந்திய, செல்லுதற்கு அரிய சிறு
இடங்களில் உள்ள படுகுழிகளைக் கொண்ட, வழியில், தலைவன் இருட்டில்
நடந்து வரும்போது குழியில் அவன் கால்கள் அகப்பட்டு வருந்தாதவாறு
அவனுடைய தளராநின்ற அடிகளைத் தாங்கும் பொருட்டு இன்று சென்று
விட்டது’ என்ற கூற்றில்,
தலைவன் இரவுக்குறியிடை வரும் நெறியின் ஏதம் அஞ்சித்
தலைமகள்
இரவுக் குறியை வெறுத்து, அவனைப் பிரியாது உடன்
வாழ்தற்குரிய வரைவு
வேட்டமை புலப்படுத்தப்பட்டவாறு.]
4 அவன்புணர்வு மறுத்தல்:
இரவுக்குறியும் பகற்குறியும் விலக்குதற்கு எழுந்த உள்ள நிகழ்ச்சி. அது
தமரை அஞ்சி மறுத்தமையானும், இது வரைவு கடாதல் கருத்திற்று
ஆகலானும் திளைப்புவினை மறுத்தலோடு இது வேற்றுமை உடைத்து. இது,
‘நல்வரை நாட நீவரின்
மெல்லியல் ஓரும் தான்வா ழலளே.’
அகநா. 12
எனவரும்.
[திளைப்புவினைமறுத்தலும் அவன் புணர்வு மறுத்தலும் முடிந்த
முடியில்
ஒன்றாமேனும், அவற்றின் காரணங்கள் வேறுவேறாக உள்ளன.
திளைப்புவினை மறுத்தல் ஊரவர் தூற்றும் அலருக்கு அஞ்சிச் செய்தது.
அவன் புணர்வு மறுத்தல் களவு ஒழுக்கம் தவிர்த்து வரைதல் வேண்டும்
என்ற வேட்கையால் செய்தது. |