பகற்குறி வாராநின்ற
தலைமகன் தோழியால் செறிப்புஅறிவுறுக்கப்பட்டு
‘இரவுக்குறி வாரா வரைவல்’ என்றாற்குத் தோழி அதுவும் மறுத்து
வரைவுகடாய பாடற்பகுதி இது.
‘தாய் கண்ணைவிட அன்போடு தலைவியைப் பாதுகாக்கத் தொடங்கி
விட்டாள். தந்தையும் தலைவி புறத்தே புறப்பட்டால் ‘எங்குப்
புறப்படுகிறாய்?’ என்று வினவுகிறான். நாங்கள் இருவேமும் பிரிவுஇன்றி
இயைந்த உவர்த்தல் இல்லாத நட்பினை உடைய இருதலைகளை உடைய
பறவையைப் போல ஈருடல் ஓருயிரேமாக உள்ளோம். குறவர் குடிசைகளில்
வேங்கைப் பூ விழுந்து புலிபோலக் காட்சி வழங்குவதனைக் கண்ட யானை,
மலையிலே மூங்கிலை முறித்துக் கொண்டு செல்லும் பெரிய மலை நாடனே!
நீ தொடர்ந்து களவொழுக்கம் நிகழ்த்தவேண்டிக் குறிவயின் வரின், அச்
செயலால் அவள் மகிழாது வருந்தி உயிர் நீத்துவிடுவாள்’ என்பதன்கண்
அவன் புணர்வு மறுத்தல் புலப்படுத்தப்பட்டவாறு.]
5 தூது முனிவின்மை:
புள்ளும் மேகமும் போல்வன கண்டு ‘சொல்லுமின் அவர்க்கு’ என்று
தூது
இரந்து பன்முறையானும் சொல்லுதல். அது,
‘கானலும் கழறாது கழியும் கூறாது
தேன்இமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
ஒருநீ அல்லது பிறிதுயாதும் இலனே
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தல்
கமழ்இதழ் நாற்றம் அமிழ்துஎன நசைஇத்
தண்தாது ஊதிய வண்டினம் களிசிறந்து
பறைஇக் கிளரும் துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால் அலவ.’
அகநா. 170
எனவரும். |