[களவுக்காலத்துத் தலைவன்
வாராதுபோகப் பிரிவாற்றுதல் தாங்காத
தலைவி
காமம் மிக்க கழிபடர்கிளவியால் நண்டினை நோக்கி, “அலவ!
‘கடல்
சிறுகாக்கை காமர் பெடையொடு வெள்இறாக் கனவும் நள்ளென்
யாமத்து
நின் மிக்க காமநோயைப் போக்கிய தலைவி இன்று தன்னுடைய
மிக்க
துயரை நின்துணை இன்றித் தனியே நீந்துதல் கூடுமோ ?’ என்ற
செய்தியை
அவனிடம் தூது சென்று கானலோ கழியோ புன்னையோ மொழியாது
ஆதலின், எனக்கு உற்ற துணையாகிய நீ அச் செய்தியைத் தலைவனிடம்
சென்று தூகாக உரைத்தல் வேண்டும்.” என்று தலைவி தன் பிரிவு
ஆற்றாமை பற்றித் தூது விடுவதன் மூலம், பிரிதல் இல்லா வரைந்து எய்தும்
கூட்டத்து வேட்கையைப் புலப்படுத்தியவாறு,]
6 துஞ்சிச் சேர்தல்:
மலையகத்துப் பொய்த்துயிலோடு மடிந்து வைகுதல். அஃது,
‘என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறும் மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே.’
குறுந். 161
எனவரும்.
[இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப்
பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாகத்
தோழிக்குச் சொல்லுவாளாகச் சொல்லிய பாடற்பகுதி இது.
‘தோழியே! சூரியனும் மறைந்து விட்டான். மழையும் இடைவிடாமல்
பேய்களும் கண்களை அடிக்கடிக்கொட்டி நடுங்கும்படி விடாமல் வேகமாகப்
பெய்துகொண்டிருக்கிறது. அதற்குமேல் தாயும் புலிப்பல் தாலியை அணிந்த
தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு ‘அன்னையே!’ என்று என்னை |