ஒத்த நூற்பா
முழுதும்--
தொல், பொ. 271
தெய்வம் அஞ்சல்1 புரைஅறம் தெளிதல்2
இல்லது காய்தல்3 உள்ளது உவர்த்தல்4
புணர்ந்துழி உண்மை5 பொழுதுமறுப்பு ஆக்கம்6
அருள்மிக உடைமை7 அன்புதொக நிற்றல்8
பிரிவுஆற் றாமை9 மறைந்தவை உரைத்தல்10
புறஞ்சொல் மாணாக் கிளவியொடு தொகைஇச்11
சிறந்த பத்தும் செப்பிய பொருளே.
தொல். பொ. 272
எனவும், ஓதுவன ஓத்தாகலின்,
முறையே இன்பத்தை வெறுத்தல் முதலாகக்
கலக்கம் ஈறாகக் கிடந்த இருபதும் புணர்ச்சிக்கு நிமித்தம்
ஆகாதன
போன்று காட்டினும் அவற்றை மிகவும் ஆராய்ந்து உணரின் புணர்ச்சி
நிமித்தமாய் மெய்ப்பாடாம்
என்றும், முட்டுவயின் கழறல் முதலாகக்
கட்டுரை இன்மை ஈறாகக் கிடந்த எட்டும் பின் ஒரு
காலும் அழியாத
வரைந்து எய்தும் கூட்டத்திற்கு ஏதுவாகிய மெய்ப்பாடு என்றும், தெய்வம்
அஞ்சல் முதலாகப் புறஞ்சொல் மாணாக் கிளவி ஈறாகக் கிடந்த
பதினொன்றும் அழிவில் கூட்டம்
நிகழ்ந்த பின்னர்க் கற்பின்கண் நிகழும்
மெய்ப்பாடாம் என்றும் கொள்க.
1 தெய்வம் அஞ்சல்:
தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியர் ஆகிய
தாபதரும் இன்னார் என்பது
அவனால் உணர்த்தப்பட்டு உணர்ந்த
தலைமகள் அத்தெய்வத்தினை அஞ்சி ஒழுகும் ஒழுக்கம் அவள்கண்
தோன்றுதல். அது,
‘சினைவாடச் சிறக்கும்நின் சினந்தணிந் தீகெனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ.’
கலி. 16
எனவும்,
108
|