858இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

     ‘அச்சா றாக உணரிய வருபவன்
     பொய்ச்சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல்.’

கலி. 75

எனவும் வரும்.

      [தலைமகள் தன் குலதெய்வத்தையே வணங்குவாள் என்பது.

     ‘பண்கெழு மெல்விர லால்பணைத் தோளிதன்
     கண்கழூஉச் செய்து கலைநலம் தாங்கி
     விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய
     வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள்.’

சீவக 200

என்றபாடல் உரையில் நச்சினார்க்கினியர், ‘தெய்வம் அஞ்சல் என்ற
மெய்ப்பாட்டியல் சூத்திரம் தன்குலதெய்வத்தை வணங்குதற்கு விதி ஆமாறு
உணர்க’ என்று சுட்டியது காண்க.

‘சினைவாட’-

     தலைமகன் பொருள்வயின்பிரிந்தஇடத்து அவன்போகிய காட்டது
நிலைமைநினைத்து ஆற்றாளாகிய தலைமகள் ‘அவன் பொருட்டாக நாம்
இவ்வகைப்பட்ட தெய்வங்களைப் பரவுதல் நம் கற்புக்கு இயைவதோ?’
என்று கூற, அதுகேட்ட தோழி ‘அவ்வாற்றானே மீண்டனர்; நீ கவலல்
வேண்டா’ எனக் கூறிய பாடற்பகுதி இது.

     சூரியன் எல்லோருக்கும் பொதுவான தெய்வம் என்று கொள்ளும்
கொள்கையும், பாலைநிலத்திற்கே உரிய தெய்வம் என்று கொள்ளும்
கொள்கையும் என இருதிறத்துக் கொள்கையும் உண்டு. பாலைநிலத் தெய்வம்
என்றுகொள்ளும் கொள்கையள் இத்தலைவி ஆதலின், “நாம் நம்
குலதெய்வத்தை விடுத்து அயல் தெய்வமாகிய சூரியனை நோக்கி,
‘மரக்கொம்புகள் வாடும்படியாகச் சிறக்கும் நின் சினம் தணிவதாகுக’ என்று
பரவிச் செறிந்த கதிரை உடைய