அகத்திணையியல்--நூற்பா எண் 208859

 

ஞாயிற்றை வேண்டிக்கோடலும் நம் கற்பிற்கு இயைவது ஒரு காரியமோ?”
என்று கூறும் கூற்றில், குலதெய்வத்தைத் தலைமகள் தலைவன் நலம் கருதி
வழிபடும் இயல்பு உண்மை குறிப்பான் அறிவுறுக்கப்பட்டவாறு.

‘அச்சாறாக’ --

     ‘தலைவன் நாள்தோறும் வதுவை அயர்ந்து வந்தால் நான் அதற்குப்
பொறேனாக, நீ ஊடல் இன்றி அவன் வந்த-பொழுதே எதிர் கொள்ளுதி’
என்ற தோழிக்குத் தலைமகள் அதற்குக் காரணம் கூறியதாக அமைந்த
பாடல் இது.

     ‘முயக்கத்தால் வாடிய பூவோடே எம்மனையிடத்து வாராதேகொள்’
என்று கூறி யான் ஊடி இருப்பேனாயின், நீடியாமல், தன் பொய்ச்சூளுக்கு
நாம் அஞ்சும் அச்சமே தான் ஊடல் உணர்த்தும் வழியாக ஊடல்
உணர்த்துதற்கு வருபவனுடைய பொய்யாகிய சூளுக்கு அஞ்சிப் புலவேனாய்
இருப்பேன்’ என்ற தலைவி கூற்றில், தலைவன் பொய் உரைத்தால் அதற்குத்
தன் குலதெய்வம் அவனை வருத்தும் என்று தெய்வம் அஞ்சுதல்
பெறப்பட்டவாறு.]

2  புரை அறம் தெளிதல்:

   தனக்கு ஒத்த இல்லறம் இன்னது என்று தலைமகள் மனத்துப்படுதல்.
அது,

     ‘விரியுளைக் கலிமான் தேரொடும் வந்த
     விருந்துஎதிர் கோடலின் மறப்பல் என்றும்’

கலி. 75

எனவரும். இஃது அவனோடு சொல்லாடாது ஊடி இருப்பேன் ஆயின்,
விருந்துகொண்டு புகுதரும்; அதனால் ஊடலை மறப்பேன்’ என்றமையின்,
புரைஅறம் தெளிதல் ஆயிற்று.

    [தலைவன் நாடோறும் வதுவை அயர்ந்து வருதலைத் தோழி
பொறாளாகவும், தலைவி ஊடல் இன்றி அவன் வந்த