860இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

பொழுதே எதிர்கொள்வதன் காரணத்தைத் தோழி கேட்பத் தலைவி
சொல்லிய பாடற்பகுதியே இதுவும் ஆகும்.

     "தலைவன் என்னைநோக்கி வந்தவுடன் ‘வதுவை அயர்ந்த பின்பு
விளக்கத்தினை உடையையாய் வாராநின்றாய், எம்மை எத்தன்மையாகக்
கருதினாய்?' எனப் புலந்து கூறிப் பின்னர் ஒருமொழியைக் கூறாது
இருப்பேனாயின், அது நீங்கப் பரந்த கழுத்தின் மயிரினையும்
மனச்செருக்கினையும் உடைய குதிரை பூண்ட தேரிலே ஆரவாரிப்பக்
கொண்டுவந்த விருந்தினரை எதிர்கொள்கையினானே, எந்நாளும் புலவியை
மறப்பேன்" என்ற தலைவி கூற்றில், தலைவனுடைய தவற்றை மறந்து வந்த
விருந்தினரை எதிர்ஏற்று உபசரித்தலே இல்லறத்தின் கடப்பாடு என்று
தலைவி கற்புக்காலத்தில் மனங்கொண்டமை பெறப்படுகிறது.]

3  இல்லது காய்தல்:
   களவின்கண் போலாது தலைமகற்கு இல்லாததனை உண்டாக்கிக்

   கொண்டு காய்தல். அது,

    ‘நற்றார் அகலத்துக்க ஓர்சார் மேவிய
    நெட்டிருங் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும்
    முட்டுப்பாடு ஆகலும் உண்டு'

கலி. 63

எனவரும்.

    [‘காவற்பாங்கின் ஆங்கோர் பக்கமும்' தொல். பொ. 41 என்புழி, ‘ஆங்கோர் பக்கமான கடவுளரைக் கண்டு தங்கினேன்' என்ற தலைவனிடம் ‘நீ கண்ட கடவுளர் இவர்' என்று கூறித் தலைவி புலந்த செய்தி கூறும் பாடற்பகுதி இது.

    ‘நீ கண்ட கடவுளர், பற்கள் விழுந்தெழுந்த பருவத்தினர். அவர்கள்
உன்னையே கூடவந்தவர். நோக்கத்தால் மற்றவர் மனத்தைப் பிணிக்கும்
கண்ணோடு, முன்னொரு