நாள் நீ பூப்பலிவிட்ட
கடவுளர் அவர். அவர் திருப்பரங்குன்றத்தில்
நின்னோடு மாரிக்காலத்துப் பல நாளும் தங்கிய கடவுளர். நீ கண்ட
கடவுளருள் நின் மார்பில் குறிகள் செய்த கடவுள் யார்? இங்கு நீ தங்கின்
அக்கடவுளர் வெகுள்வர். நீ செல்லாதிருப்பின், நின் மாலை அணிந்த
மார்பிற்குப் பயன் கோடல் இல்லையாக, நின்னைத் தழுவிய நெடிய கரிய
கூந்தலை உடைய கடவுளராகிய பரத்தையர் எல்லோருக்கும் காமம்
நுகர்தலின் இடையீடு ஏற்படும். ஆதலின் விரைந்து அவர்பாற் செல்க' --
ன்று, தலைவனுக்குப் புறத்தொழுக்கம் இன்று எனினும், உள்ளது போலக்
கொண்டு அவனைத் தலைவி வெகுளுதல் சுட்டப்பட்டவாறு. ]
4 உள்ளது உவர்த்தல்:
தலைமகனால் பெற்ற தலையளி உள்ளதே ஆயினும், அதனை உண்மை
என்றே தெளியாது அருவருத்து நிற்கும் உள்ள நிகழ்ச்சி. அது,
‘கடல்கண் டன்ன கண்ணகல் பரப்பின்' என்ற பாட்டினுள்,
‘வேப்புநனை அன்ன நெடுங்கண் நீர்ஞெண்டு
இரைதேர் வெண்குருகு அஞ்சி அயல
ஒலித்த பகன்றை இருஞ்சேற்று அள்ளல்
திதலையின் வரிப்ப ஓடி விரைபுதன்
நீர்மலி மண் அளைச் செரியும் ஊர.'
அகநா. 176
என்புழித் தலைமகன் வாயில் வேண்டச் சென்றானைப் பிறர் கூறும் பழிக்கு
வந்தாய் என்றமையின், இஃது உள்ளது உவர்த்தல் ஆயிற்று.
[‘வேம்பின் அரும்பினை ஒத்த நீண்ட கண்களை உடைய நீர் நண்டு
இரையை ஆராய்ந்து பார்க்கும் நாரைக்கு அஞ்சிப் பக்கலில் உள்ள
தழைத்த
பகன்றை படர்ந்த கரிய சேற்றில் |