862இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

தேமல்போல வரி உண்டாக ஓடிச்சென்று விரைந்து தனது ஈரம்மிக்க மணல்
அளையுள் பதுங்கும் ஊரனே!' -- என்று விளித்து,

     ‘பரத்தையர் சேரிக்கண் அவர்நலம் நுகர்ந்திருந்த நீ ஊரவர் அலர்
தூற்றுதலை அஞ்சி அப்பரத்தையர் செய்த குறி உன்மார்பில் கிடப்ப
உன்மனைக்கு விரைந்து வரலாயினாய்' என்று உள்ளுறைபடக் கூறி,
தலைவன் உண்மையாகவே அன்புகொண்டு தலைவியை நோக்கி வந்ததை
‘ஊரவர் கூறும் பழிக்கு அஞ்சி வந்தாய்' என்று சொல்வது உள்ளது
உவர்த்தலாம்.]

5  புணர்ந்துழி உண்மை:

  முற்கூறிய இல்லது காய்தலும் உள்ளது உவர்த்தலும் ஆகிய விகாரம்
இன்றிப் புணர்ச்சிக் காலத்துச் செய்வன சென்ற உள்ள நிகழ்ச்சி. அது.

    ‘குளிரும் பருவத்தே ஆயினும் தென்றல்
    வளிஎறியின் மெய்யிற்கு இனிதாம்-ஒளியிழாய்
    ஊடி இருப்பினும் ஊரன் நறுமேனி
    கூடலின் இனிதாம் எனக்கு.'

ஐந். ஐம். 30

எனவரும்.

    [குளிர் காலமாக இருந்தாலும் தென்றல் காற்று வீசுவது உடலுக்கு
இன்பம் தரும். அது போலத் தலைவன் தவறுகண்டு ஊடியிருக்கும்
நேரத்தும், அவன் நறுமேனியைக் கூடும் வாய்ப்புப் பெறுதல் எனக்கு
என்றும் இனிது' என்று தலைவன்பால் தான் ஊடியும் கூடியும் இன்பம்
நுகரும் பேரின்பத்தைத் தலைவி சொற்றவாறு. ]

6  பொழுது மறுப்பு ஆக்கம்:
   களவின்கண் பகற்குறியும் இரவுக்குறியும் என வரையறுத்தாற்  
   போல்வதொரு வரையறை இன்மையின்