| 
       
      அப்பொழுதினை மறுத்தலாகிய 
      ஆக்கம். எனவே, களவுக்காலத்துப் பொழுது 
      வரைந்துபட்ட இடர்ப்பாட்டின் நீங்கிய மனமகிழ்ச்சி ஆக்கம். அஃது, 
            ‘அயிரை பரந்த அந்தண் பழனத்து 
          
      ஏந்தெழில் மலர்ந்த தூம்புடைத் திரள்கால் 
          
      ஆம்பல் குறுநர் நீர்வேட் டாங்குஇவள் 
          
      இடைமுலைக் கிடந்து நடுங்க லானீர் 
          
      தொழுதுகாண் பிறையின் தோன்றி யான்நுமக்கு 
          
      அரியம் ஆகிய காலைப் 
          
      பெரிதும் நோன்றனிர் நோகோ யானே.' 
      
      குறுந். 178 
      
      
      எனவரும். 
      
       
         
      [கடிநகர்ப் புக்க தோழி தலைமகன் புணர்ச்சி விதும்பல் கண்டு, 
      முன்னர்க்
      களவுக் காலத்து ஒழுகலாற்றை நினைந்து அறிந்து கூறியது இது. 
       
         
      ‘அயிரைமீன் மேய்தற்குப் பரந்த அழகிய தண்ணிய பொய்கையில் 
      அழகைக்
      கொண்ட மலரை மேற்கொண்ட ஆம்பல் தண்டினைப் பறிப்பவர் 
      நீர்வேட்கையை அடைந்தாற்போல, இத்தலைவியின் முலையிடையே துயிலப் 
      பெற்றும் நடுங்குதலை ஒழிந்தீர் அல்லீர். யாம் பிறைபோலத் தோன்றி 
      நுமக்கு அரியமாயிருந்த காலத்துப் பெரிய வருத்தங்களைப் பொறுத்தீர் 
      போலும்! யான் அதற்காக வருந்துகிறேன்.' 
       
         
      ‘ஆம்பலைப் பறிப்போர் நீர் வேட்கையைத் தணித்தற்கு நீர் பக்கலில் 
      இருந்தும் அவர் நீரைவேட்டு விரைவது போல்வது, நின் வேட்கையை 
      முற்றுவிக்கும் தலைவி பக்கலில் இருக்கும் வாய்ப்பைப் பெற்றும், நீ காமம் 
      நுகர விரைவது' என்ற கூற்றில் இடையீடு இன்றிக் காமம் நுகரும் வாய்ப்பு 
      உணர்த்தப்பட்டவாறு.]  |