அகத்திணையியல்--நூற்பா எண் 208865

 

[தோழி தலைமகனுக்கு வாயில் மறுத்த இப்பாடலில்,

    ‘நீ உண்மையான அன்பு எம்மாட்டு இன்றி ஊரவர் கூறும்
பழிச்சொற்களுக்கு அஞ்சி எம் இல்லத்திற்கு வருகின்றாய் நீ ஏனைய
பரத்தையரோடு விழா அயர்ந்தது கேட்டு மனம் தாங்காது தன் செயற்கை
வனப்புக்களை அழித்துக் கொண்டு உன் காதற்பரத்தை உன்னைக்
காண்டற்குத் தேடிச் செல்வாள். அவள் போல்பவர் அல்லேம் யாம்.
புதல்வனைப் பயந்து நெல் முதலிய வளம் சான்ற மனையில் நின்னை

இன்றியும் இல்லறம் நடத்தும் கடப்பாடு எமக்கு உண்டு. அவளுக்குக்
காமநுகர்ச்சியன்றி வேற்றுக் கடமை ஏதும் இன்று' என்ற தலைவி கூற்றில்
இல்லறம் நடத்தும் கடமைக்கண் அவள் கொண்ட அன்பு
வெளிப்படுத்தப்பட்டவாறு. ]

9  பிரிவு ஆற்றாமை:

   களவில் பிரிவு ஆற்றுதல் வேண்டுமாறு போலக் கற்பினுள் பிரிவு  
   ஆற்றுதல் வேண்டாமை. அஃது,

    ‘இடன்இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இளிவுஎனக்
    கடன்இறந்து செயல்சூழ்ந்த பொருள்பொருள் ஆகுமோ
    வடமீன்போல் தொழுதுஏத்த வயங்கிய கற்பினாள்
    தடமென்தோள் பிரியாமை பொருளாயின் அல்லதை.'

கலி. 2

எனவரும்.

     [தலைவன் கற்புக்காலத்தில் பொருள்வயிற் பிரிதலை அறிந்த தோழி
அவனைச் செலவு அழுங்குவிக்கும் பாடற்பகுதி இது.

    "தம்முடைய இல்வாழ்க்கைக்கு வேண்டும் பொருள் இல்லை என்று
கூறிவந்து இரந்தவர்க்குச் சிறிதும் கொடா
109