868இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

போல, இன்று பலராலும் பேசப்பட ஊர் முழுதும் நின் பழி பரவியுள்ளது' -
என்ற தோழி கூற்றில், தலைவனுக்கு ஏற்படும் பழி கருதித் தலைவி மனம்
நோகும் திறம் சொற்றவாறு. ]

இன்னும்,

      நிம்பிரி1 கொடுமை2 வியப்பொடு3 புறமொழி4
     வன்சொல்5 பொச்சாப்பு6 மடிமையொடு7 குடிமை8
     இன்புறல்9 ஏழைமை10 மறப்போடு11 ஒப்புமை12
     என்று இவை இன்மை என்மனார் புலவர்

தொல். பொ. 274


என்றமையான், காமக்குறிப்பு ஆகாத இவை எல்லாம் இன்றி வருதலைத்
தலைமகன்கண் நிகழும் மெய்ப்பாடு என அவை தம்மை வரையறுத்துக்
கூறாது அவற்கு ஆகாதன வரையறுத்துக் கூறியவாறும், தலைமகட்கு உரிய
மெய்ப்பாடு ஆயின வரையறுத்துக் கூறினமையின் அவட்கு ஆகாதன கூறல்
வேண்டாதவாறும் கண்டு கொள்க. ஆகாதனவற்றிற்கு உதாரணம்
காட்டலாவதில்லை.

1  நிம்பிரி:
  பொறாமை தோன்றும் குறிப்பு. அவை ‘இந்நாள் சிறிது பொறுத்தாய்'
  என்றாற்போல்வன.

2  கொடுமை:
   கேடு சூழநினையும் தீவினை உள்ளம்.

3  வியப்பு:
   தலைமகள்பால் தெய்வத்தன்மை கண்டான்போல் வியந்து ஒழுகுதல்.

4  புறமொழி:
   புறங்கூற்று.

5  வன் சொல்:
   கண்ணோட்டம் இன்றிச் சொல்லும் சொற்கள்.