6 பொச்சாப்பு:
கடைப்பிடியின்றி நெகிழ்ந்திருத்தல்.
7 மடிமை:
சோம்புள்ளம்.
8 குடிமை:
‘இவள் இழிந்த பிறப்பினள்' எனத் தன்னை நன்கு மதித்து ஒழுகுதல்.
9 இன்புறல்:
ஒருவர் ஒருவரின் தாமே இன்புறுகின்றாராக நினைத்தல்.
10 ஏழைமை:
நுழைந்த உணர்வினர் அன்றி வரும் வெண்மை.
11 மறப்பு:
மறவி.
12 ஒப்புமை:
‘இன்னாளை ஒக்கும் இவள்' என்று அன்பு செய்தல். என உணர்க
208
விளக்கம்
நிம்பிரி-சகிப்புத்தன்மை
இன்றி இருத்தல்.
வியப்பு- தலைமகள்பால் தெய்வத்தன்மை காணில் இல்லறம் சிறவாது
என்பதனைக் காரைக்கால்
அம்மையார் புராணத்து.
‘வணிகனும் தன்கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான்
தணிவறும் பயமேற்கொண்டு உள்ளமும் தடுமாறு எய்தி
அணிகுழ லவரை வேறோர் அணங்கெனக் கருதி நீங்கும்
துணிவுகொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்பின்றி
ஒழுகும்நாளுள்'
முதலிய பாடல்களான் அறிக.
208 |