புறமொழி--இல்லத்து நிகழும்
செய்தி புறத்தார் அறியப் புலப்படச்
செய்தல்.
பொச்சாப்பு--உறுதியின்றி எச்செயலிலும் ஈடுபடல்.
ஏழைமை--எதன்கண்ணும் மேம்போக்கான அறிவு.
ஆழ்ந்து அறியாமையால் எதன் உண்மையும் உள்ளவாறு உணரப்படாது
என்பது.
எச்சத்தின் இயல்
581 சொல்லொடும் குறிப்பொடும் முடிவுகொள் இயற்கை
புல்லிய கிளவி எச்சம் ஆகும்.
இது பத்தாம் எண்ணும் முறைமைக்கண் நின்ற எச்சம்
இவ்வியல்பிற்றாய்ச்
செய்யுட்கு உறுப்பாய் வரும் என்பதோர் ஒழிபு
கூறுகின்றது.
(இ-ள்) கூற்றினானும் குறிப்பினானும் முடிக்கப்படும் இலக்கணத்தோடு
பொருந்திய கிளவி எச்சம் என்னும் உறுப்பாம் என்றவாறு.
ஈண்டுச் சொல் என்றது, சொல்லோத்தினுள் சொல் இசை - குறிப்பு-
என்ற மூன்றனுள் சொல் என்றது என உணர்க.
‘முடிவுகொள் இயற்கை' எனவே, செய்யுளின்கண்ணது அன்றிப்
பின்கொணர்ந்து முடிக்கப்படும் என்பதூஉம் பெற்றாம்.
உதாரணம் சொல்லோத்தினுள் குறிப்பெச்சம் உணர்த்திய
வழிக்காட்டினாம்.
அற்றேல் அஃதாக, மாட்டேற்றான் எய்துவியாது இதனை
எடுத்தோதி
விதந்தது என்னையெனின், ஆண்டு எச்சம் என்ற
துணைஅல்லது,
அகப்பொருள் உறுப்பாய்ச் செய்யுட்கு உறுப்பாம் என்னும்
விசேடவிதி
ஆண்டுப் பெறப்படாமையின், விதந்து ஓதல் வேண்டும் என்க.
|