அகத்திணையியல்--நூற்பா எண் 209871

இன
 

இனி,

     ‘செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
     செங்கோல் அம்பின் செங்கோட்டு யானைக்
     கழல்தொடிச் சேஎய் குன்றம்
     குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.'

குறுந். 1

என இதனையே செய்யுள் முடிந்தவழியும், ‘இவற்றால் யாம்குறை உடையம்
அல்லம்' என்று தலைமகற்குச் சொன்னாளேல் கூற்றெச்சத்திற்கும்,
‘காண்பாயாகின் காண்' எனத் தலைமகட்குச் சொன்னாளேல்
குறிப்பெச்சத்திற்கும் உதாரணமாகக் காட்டினும் அமையும். 209
 

விளக்கம்
 

     நூற்பா - தொல். பொ. 578. உரை பேராசிரியர் உரையைப் பெரிதும் தழுவியது.

    இவ்வெச்சம் என்னும் உறுப்பு சொல்லதிகாரத்தில் சொல்லெச்சம்
இசைஎச்சம் குறிப்பெச்சம் என்ற மூன்று திறத்ததாகப் பொதுவியலில் (இ. வி.
350) விளக்கப்பட்டுள்ளது. அவ்வெச்சம் அகப்பாட்டு உறுப்பாக வரும்
என்பதனை விளக்க ஈண்டும் கூறினார்.

    கூற்றெச்சமாவது செய்யுளில் கூறாது விடுக்கப்பட்ட செய்தியைக்
கூறினாலும் தவறின்றாக அமைவது.

   குறிப்பெச்சமாவது செய்யுளில் கூறாது விடுக்கப்பட்ட வேண்டியதாய்
வெளிப்படையாகக் கூறத்தகாததாய் அமைவது.

‘செங்களம்பட'--

    ‘அவுணரைப் போரிடை அழித்த அம்பினையும், யானையினையும்,
உழலவிட்ட விரவளையையும் உடைய முருகனுக்கு உரிய இக்குன்றம்
காந்தட்பூ நிறைய உடையது.' -- இது தோழி கூற்று.