தலைவன் காந்தட்பூக்களைக்
கையுறையாகக்கொண்டு வரத் தோழி
கையுறை
மறுத்து இவ்வாறு கூறினாள் என்பதைத் துறைச்செய்தியாகக்
கொள்ளின்,
‘ஐய! நீ காந்தட் பூக்களைக் கொண்டு வந்துள்ளாய்; எம்
குன்றத்தில் காந்தட்
பூக்களுக்குக் குறைவுஇன்று; ஆதலின்
இக்கையுறைப்பொருள் எமக்கு
அருமை உடையதன்று. இவை எமக்கு
வேண்டா' என்ற செய்திகளைக்
கூறாமல், வாளா எம்குன்றத்தில் காந்தட் பூ
மிகுதியும் உண்டு என்று கூறி,
இவற்றைப் பெறப்பட வைத்த செய்தி
எச்சமாகும். இவ்வெச்சமான செய்தியை
மறைமுகமாக விளக்காமல் நேரே
சொல்லினும் இழுக்கு இன்று; ஆதலின்
கூறவேண்டிய செய்தி கூறப்படாமல்
விடுக்கப்பட்டதனால் இது
கூற்றெச்சமாகும்.
தலைவியைத் தோழி குறிக்கண் தலைமகனுடைய இருப்பிடத்திற்கு
அழைத்துச்சென்று ‘முருகனுடைய இக்குன்றத்தில் காந்தட்பூக்கள் பலவாக
உள்ளன' என்று வெளிப்படையாகக் கூறி. ‘அவற்றைக் காண்பது விருப்பம்
உண்டாயின் காண்' என்று கூறுவாள்போலத் தான் வெளிப்படையாகக்
கூறமுடியாத இரவுக்குறிக்கண் தலைவன் இருக்கும் இடம் இஃது
என்பதனைக்
குறிப்பாகக் கொள்ளவைத்தது குறிப்பு எச்சமாம். பிறவும்
இவ்வாறு
கொள்ளப்படும்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
தொல். பொ. 518
‘சொல்லே ஆயினும் குறிப்பே ஆயினும்
சொல்லி முடித்தல் வேண்டுவது எச்சம்.'
ந. அ. 232
209
பொருள்வகை இயல்
582 இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும்
ஒழுக்கமும் என்று இவை இழுக்குநெறி இன்றி
இதுவாகி இத்திணைக்கு உரிப்பொருள் எனாது
பொதுவாய் நிற்றல் பொருள்வகை என்ப.
|