அகத்திணையியல்--நூற்பா எண் 210873

 

     இது பதினொராம் எண்ணுமுறைமைக்கண் நின்ற பொருள்வகை
இவ்வியல்பிற்றாய்ச் செய்யுட்கு உறுப்பாய் வரும் என்பதோர் ஒழிபு
கூறுகின்றது,

     (இ-ள்) இன்பமும் துன்பமும் புணர்தலும் பிரிதலும் ஒழுக்கமும்
என்னப்பட்ட இவை இழுக்காதவாற்றான் இத்திணைக்கு இது பொருள் என்று
ஆசிரியன் ஓதிய உரிப்பொருள் அன்றி, அவற்றுக்கு எல்லாம் பொதுவாகப்
புலவனால் செய்யப்படுவது பொருட்கூற்று எனப்படும் என்றவாறு.

அது,

     ‘பிடிக்கை அன்ன பின்னகம் தீண்டித்தன்
     தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ'

அகநா. 9


என்றாற் போலச் செய்யுள் செய்வான் தான் வகுப்பன எல்லாம் கோடல்,
இது பாலைப்பாட்டினுள் வந்ததாயினும் குறிஞ்சி முதலாயினவற்றிற்கும்
பொதுவாம் என்பது. பொதுமை எல்லா உரிப்பொருட்கும் ஏற்பப் பல்வேறு
வகையான் செய்தல்.

210

விளக்கம்
 

    நூற்பா. தொல். பொ. 520. உரை பேராசிரியர் உரையைத் தழுவியது.

     ஒவ்வொரு திணைக்கும் தனியே சிறப்பான உரிப்பொருள்
வகுக்கப்பட்டிருக்கிறது. ஆயினும் அப்பொருள் ஒன்றனையே கொண்டு
திணைச் செய்யுள் அமைத்தல் இயலாது. இன்பம் துன்பம் புணர்தல் பிரிதல்
நடைமுறை இவற்றில் சில எல்லாத் திணைகளுக்கும் பொதுவாகக்
கொள்ளப்பட வேண்டியன. அவற்றைச் செய்யுள் செய்யும் புலவன் தான்
பாடும்
110