874இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

 

திணைப்பாட்டின் உரிப்பொருளொடு பொருந்தாவாயினும் அமைப்பதற்கு
உரிய அகப்பாட்டு உறுப்பு பொருள்வகை என்பது.

     ‘கொல்வினைப்பொலிந்த' என்ற அகநானூற்றுப் பாலைப் பாட்டில்
‘என் நெஞ்சு தலைவியின் கூந்தலைத் தீண்டித் தன்னைத் தடவுமாறு
அவளைத் தழுவிற்றோ' என்ற புணர்ச்சி பற்றிய செய்தியைத் தலைவன்
கூறினானாகப் பாலைப்பாட்டில் அமைத்தற்குக் காரணம், இன்னோரன்ன
செய்திகள்பல ஐந்திணைகளுக்கும் பொதுவாகக் கொள்ளப்படும் என்பது
கருதியே. இச் செய்தியைக் குறிப்பிடும் உறுப்பே பொருள்வகையாம்.
 


ஒத்த நூற்பாக்கள்


   
 முழுதும்--                               தொல். பொ. 520


     ‘ஒருதிணைக்கு உரிமை பூணா நிலைமை
     பொருள்வகை என்மனார் புலமை யோரே.'

ந. அ. 233
210


துறையின் இயல்



583   அவ்வம் மாக்களும் விலங்கும் அன்றிப்
      பிறஅவண் வரினும் திறவதின் நாடித்
      தத்தம் இயல்பின் மரபொடு முடியின்
      அத்திறம் தானே துறைஎனப் படுமே.


     இது பன்னிரண்டாம் எண்ணு முறைமைக்கண் நின்ற துறை
இவ்வியல்பிற்றாய்ச் செய்யுட்கு உறுப்பாய் வரும் என்பதோர் ஒழிபு
கூறுகின்றது.

     (இ-ள்) ஐவகை நிலத்திற்கு உரியர் எனப்படும் பல்வேறு வகைப்பட்ட
மக்களும் மாவும் புள்ளும் ஓதிவந்தவாறு அன்றிப் படைத்துச் செய்யினும்,
அவ்வந்நிலத்திற்கு ஏற்ற இலக்கணமும் வரலாற்று முறைமையும் பிறழாமல்
செய்யின் அது மார்க்கம் எனப்படும் என்றவாறு.