மார்க்கம் எனினும் துறை
எனினும் ஒக்கும்
‘ஊர்க்கால் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்'
என்னும் கலியுள், (56)
‘கொழுநிழல் ஞாழல் முதிர்இணர் கொண்டு
கழும முடித்துக் கண்கூடு கூழை.'
என நெய்தல் தலைமகள்போலக் கூறி, அவளை மருதநிலத்துக் கண்டான்
போல,
‘ஊர்க்கால் நிவந்த பொதும்பருள்'
எனவும் சொல்லிப் பின் குறிஞ்சிப்பொருளாகிய புணர்தல் உரிப்பொருளான்
முடித்தான்; அவ்வாறு மயங்கச்செய்யினும், குறிஞ்சித்துறைப்பாற்படச்
செய்தமையின் அத்துறை உறுப்பான் வந்தது என்பது.
இதுவும் மேலைப்பொருள்வகைபோலப் புலவரால் செய்து
கொள்ளப்படுவது
ஆகலின், அதற்குப்பின் வைக்கப்பட்டது.
இங்ஙனம் கூறியவாற்றான். உரைப்போர் கேட்போர் உண்மைஇன்றி,
உரைக்கும் கவியே உரைப்பதூஉம் துறை என்னும் உறுப்பாதல் பெற்றாம்.
‘எறிதேன் அலம்பும் சிலம்பின்எப் போதும் இரந்திவள்பின்
வெறிதே திரிந்து மெலிந்தனம் யாம்உள்ளம் மெல்லியற்குப்
பிறிதேகொல் என்னும் பெருந்தகை தேறப் பெரிதுயிர்த்து
வறிதேமுறுவல்செய்தாள் தஞ்சைவாணன்வரை அணங்கே.'
தஞ்சை. 15
இதனுள் கூற்றிற்கு உரியன் அல்லாத கவிக் கூற்றும் அதற்கு
உரியார் கூற்றின்பால் படுத்து அடக்கப்பட்டவாறு காண்க,
‘முத்திறப் பொருளும் தத்தம் திணையொடு
மரபின் வாராது மயங்கலும் உரிய.'
இ. வி. அ. 22
|