‘எறிதேன்’ --
‘இம்மலையில் பல்கால் இவளை இரந்து பயனின்றி யான் திரிந்தேன்;
இவள்
கருத்து என் கருத்துக்கு வேறுபட்டது போலும்’ என்ற தலைவன்
தெளிவடையுமாறு பெருமூச்செறிந்து தஞ்சைவாணன் மலைத்தலைவி
முறுவலித்தாள்.
இஃது உரைப்போரோ கேட்போரோ இன்றிக் கவியே கூறியதாம்.
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
தொல். பொ. 521
‘சொல்லிய அல்ல ஒன்றினும்
அவற்றோடு
ஒல்லும் வகைதெரிந்து உணர்த்தியல் வழாமல்
உரைப்போர் கேட்போர் உண்மை இன்றி
உரைக்கும் கவியே உரைப்பது துறையே.’
ந. அ. 234
211
அகப்பொருள் ஒழிபு வகை
584 உவமப்பொருளும் இறைச்சிப் பொருளும்
திணைஉணர் வகையான் அணையும் பாட்டினுள்.
இன்னும் ஒருவாற்றான் அகப்பொருள் ஒழிபு கூறுவான் புகுந்தவற்றுள், இது
திணை உணர்தல் கருவி ஆவன சில பொருள் செய்யுட்கண் வருமாறு
கூறுகின்றது.
(இ-ள்) உவமப்பொருளும் கருப்பொருட்கு நேயம் ஆகிய
இறைச்சிப்பொருளும் என்று இருபகுதிப்பட்ட பொருளும் திணை உணரும்
கூற்றான் பொருந்தும் செய்யுட்கண் என்றவாறு.
212
விளக்கம்
அகத்திணையை உணர்வதற்கு
உவமங்களும், இறைச்சி என்ற
உள்ளுறைப்பொருளும் பெரிதும் பயன்படும் என்பது. |