878இலக்கணவிளக்கம் - பொருளதிகாரம்

உள
 

    உள்ளுறைப் பொருள் தருவன ஐந்து. அவையாவன- இறைச்சி, உவமம், சுட்டு, நகை, சிறப்பு என்பனவாம்;

    ‘உடனுறை உவமம் சுட்டுநகை சிறப்புஎனக்
    கெடல்அரு மரபின் உள்ளுறை ஐந்தே’

தொல். பொ. 242


என்பஆகலின்.

     உபமானத்தைக் கூறி உபமேயத்தைப் பெறப்பட வைப்பது உள்ளுறை
உவமம். இறைச்சி அன்னதன்றிச் சொல்லப்பட்ட செய்தியைக்கொண்டு
அதன்குறிப்பாகப் பிறிதொன்று கொள்வது.
 

ஒத்த நூற்பா
 

      முழுதும்--                                      ந. அ. 236

212

உவம வகை



585  உள்ளுறை உவமம் வெளிப்படை உவமம்என
     எள்ளரு உவமம் இருவகை உடைத்தே.


     இது மேற்கூறிய உவமப் பொருள் இத்துணைத்து என்கின்றது.

     (இ-ள்) உள்ளுறை உவமமும் வெளிப்படை உவமமும் என முன்னர்க் கூறிய இகழ்தற்பாடுஇல்லாத உவமப் பொருள் இருவகையினை உடைத்தாம்
என்றவாறு.                                              213
 

விளக்கம்
 

     உவமமாவது உள்ளுறை உவமம் எனவும், வெளிப்படை உவமம் எனவும் இருவகைப்படும்.

    தொல்காப்பியனார் யாண்டும் உவமம் என்ற சொல்லையே கையாண்டுள்ளார். உவமம் பொருள் புலப்பாடு செய்யும் கருவிகளில் ஒன்று என்பதே அவர் கருத்து. உவமம் ஓர் அணி என்பது இந்நூலாசிரியர் கருத்து. இவர் உபமா என்ற