அகத்திணையியல்--நூற்பா எண் 213,214879

ஆர
 

ஆரியச்சொல் வடசொல்லாகிய உவமை என்ற சொல்லையும் உவமம் என்ற
சொல்லையும் கையாளுவதனை இவர் நூற்பா, உரை இவற்றில் காணலாம்.
 

ஒத்த நூற்பாக்கள்
 

     ‘உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத்
     தள்ளாது ஆகும் திணைஉணர் வகையே’.

தொ. பொ. 46


      முழுதும்--                                    ந. அ. 237

213

உள்ளுறை உவம இலக்கணம்

அவற்றுள்,
586  உள்ளுறை உவமம் உய்த்துணர் வகைத்தாய்ப்
     புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும்.

     இது, முறையானே உள்ளுறை உவமம் இவ்வியல்பிற்று என்கின்றது.

    (இ-ள்) மேல்கூறிய இரண்டனுள் உள்ளுறை உவமமாவது ஆராய்ந்து அறியும் குதியினை உடைத்தாய்ப்புள்ளு முதலிய கருப்பொருள்களே தனக்குத் தோன்றும் நிலனாகக்கொண்டு அவற்றானே புலப்படும் என்றவாறு.

    எனவே, புள்ளு முதலிய பற்றி வரும் அப்பொருள் நிகழ்ச்சி பிறிது
ஒன்றற்கு உவமமாகச் செய்தலும், அங்ஙனம் செய்யுங்கால் பவளவாய்
என்றாற் போல உவமையும் உவமிக்கப்படும் பொருளும் புலப்படக் கூறாது
உள்ளத்தான் உணரும்திறத்தான் உவமம் மாத்திரமே கூறுதலும் உள்ளுறை
உவமத்திற்கு இலக்கணம் ஆயிற்று என்பது.


உள்ளுறை-உள்ளுறுத்தல்.


     ‘வீங்குநீர் அவிழ்நீலம் பகர்பவர் வயல்கொண்ட
     ஞாங்கர்மலர் சூழ்தந்து ஊர்புகுந்த வரிவண்டு