என உபமானத்தைக்
கொண்டு உபமேயத்தை உணர வைப்பது
உள்ளுறைஉவமமாம். இவ்வுள்ளுறைஉவமம் உவமப்போலி எனவும்
கூறப்படும்.
தலைவி தான் பழகிய பொருள்பற்றியே உள்ளுறை உவமம் கூறலாம். தோழி
தன் நிலத்துப் பொருள் எல்லாவற்றையும் கொண்டு கூறலாம். தலைவன் தன்
ஆற்றல் தோன்ற உள்ளுறை உவமம் கூறுவான். பாங்கன் பாணன்
முதலாயினார் தாம்தாம் அறிந்த செய்திகளைக் கொண்டு உள்ளுறைஉவமம்
கூறுவர். தலைவி மருதத்துள்ளும் நெய்தலுள்ளும் பெரும்பாலும்
உள்ளுறைஉவமம் கூறுவாள். தலைவனுக்கு உள்ளுறைஉவமம் கூற நிலம்
வரையறை இல்லை. தோழியும் செவிலியும் ஏற்றபெற்றி உள்ளுறைஉவமம்
கூறலாம்.
இவ்வுள்ளுறைஉவமம்-வினை-பயன்-மெய்-உரு-பிறப்பு என்று ஐந்து
வகைப்படும். இத்திறம் எல்லாம் தொல்காப்பியம் முதலியவற்றான்
உணரப்படும். இஃது ஒட்டு அணியுள் அடங்கும் என்ப.
ஒத்த நூற்பாக்கள்
‘உள்ளுறை தெய்வம் ஒழிந்ததை நிலன்எனக்
கொள்ளும் என்ப குறிஅறிந்தோரே.’
தொ.பொ. 47
’உள்ளுறுத்து இதனோடு ஒத்துப்பொருள் முடிகஎன
‘உள்ளுறுத்து இறுவது உள்ளுறை உவமம்.’
48
‘பிறிதொடு படாஅது பிறப்பொடு நோக்கி
முன்னை மரபின் கூறுங் காலைத்
துணிவொடு வரூஉம் துணிவினோர் கொளினே.’
298
‘உவமப் போலி ஐந்துஎன மொழிப.’
299
‘தவலருஞ் சிறப்பின்அத் தன்மை நாடின்
வினையினும் பயத்தினும் உறுப்பினும் உருவினும்
பிறப்பினும் வரூஉம் திறத்தியல் என்ப.’
300 |