‘கிழவி சொல்லின் அவள்
அறி கிளவி
தோழிக்கு ஆயின் நிலம்பெயர்ந்து உரையாது.’
301
‘கிழவோற்கு ஆயின் உரனொடு கிளக்கும்
ஏனோர்க்கு எல்லாம் இடம்வரைவு இன்றே.’
302
‘இனிதுஉறு கிளவியும் துனிஉறு கிளவியும்
உவமம் மருங்கின் தோன்றும் என்ப.’
303
‘கிழவோட்கு உவமம் ஈரிடத்து உரித்தே.’
304
‘கிழவோற்கு ஆயின் இடம்வரைவு இன்றே.’
305
‘தோழியும் செவிலியும் பொருந்துவழி நோக்கிக்
கூறுதற்கு உரியர் கொள்வழி யான.’
306
முழுதும்--
ந. அ. 238
‘உணர்வதற்கு அரிதாம் உவமப் போலி
புணர்திறம் வினையே பொருள்மெய் உருஎனப்
பிறப்பொடும் ஐந்தாம் பெற்றித்து ஆகிச்
சிறப்புறு திணைகளின் தெய்வதம் ஒழிந்த
கருப்பொருள் களனாக் கட்டுரை பயின்று
உவமையோடு எதிர்உள் ளுறுத்தலுற்று அயலாம்
உவமச் சொல்தொக ஒருதலை ஆகியும்
அன்பினது அளவாம் அகத்திணை இருவயின்
இன்பதுன் பத்து இசைதிரிந்து இசையாத்
துணைவன் துணைவி தோழி செவிலி
இணைபெறும் பாங்கன் பாணன்என்று இவரால்
கொள்கையின் வரூஉம் குறிப்புஉடைத்து ஆகும்.’
மா. அ. 123
214
வெளிப்படை உவமவகை
587 வெளிப்படை உவமம் வினைபயன் மெய்உரு
வெளிப்பட நின்று விளங்குவ தாகும்.
இது முறையானே வெளிப்படை உவமம் இவ்வியல்பிற்று என்கின்றது.
|