(இ-ள்) வெளிப்படை உவமமாவது
தொழிலும் பயனும் வடிவும்
வண்ணமும்
தம்மோடு உவமிக்கப்படும் பொருளோடு அடுத்து உள்ளத்தான்
உணர
வேண்டாது சொல்லிய சொற்றொடரே பற்றுக்கோடாகத் தாமே
புலப்படநின்று
விளங்குவதாம் என்றவாறு.
அஃது அங்ஙனமாமாறு அணிஇயலுள் காண்க. 215
விளக்கம்
வெளிப்படை உவமமாவது உபமானமும் உபமேயமும்
வெளிப்படையாக
இருப்பதாம். உவமஉருபும் பொதுத் தன்மையும்
வெளிப்படையாகவும்
இருக்கலாம்; மறைந்தும் இருக்கலாம்.
பால்போலும் இன்மொழி: பால்-உபமானம்; மொழி உபமேயம்;
போலும்-
உவமஉருபு; இனிமை-பொதுத்தன்மை. பால் போலும் மொழி
என்ற தொடரில்
பொதுத்தன்மை மறைந்துள்ளது.
பால் இன்மொழி என்ற தொடரில் உவமஉருபு மறைந்துள்ளது.
பால்மொழி என்ற தொடரில் உவமஉருபும் பொதுத்தன்மையும்
மறைந்துள்ளன.
இவையாவும் வெளிப்படை உவமமே.
அணியியலில் பண்பு என்றதனை ஈண்டு இவர் மெய்உரு-எனத்
தொல்காப்பியர் கருத்துப்படி பிரித்துக் கூறியுள்ளார். மெய்-வடிவு; உரு-நிறம்.
இவ்விரண்டும் பண்பு என அணியியலுள் ஒன்றாக அடக்குவார்.
புலிப்பாய்ச்சல்-வினை; மழை வண்கை-பண்பு; துடிஇடை-மெய்; பொன்னிறம்-
உரு.
ஒத்த நூற்பாக்கள்
‘ஏனை உவமம் தான்உணர் வகைத்தே.’
தொல் பொ. 49
முழுதும்--
ந. அ. 239
215 |