அகத்திணையியல்--நூற்பா எண் 216885

588 இ
 

588    இறைச்சி தானே பொருள்புறத் ததுவே.

     இது முறையானே இறைச்சிப்பொருள் இவ்வியல்பிற்று என்கின்றது.

     (இ-ள்) கருப்பொருளுக்கு நேயமாகிய இறைச்சிப் பொருள்தான்
கூறவேண்டுவதொரு பொருளின் புறத்தே புலப்பட்டு அதற்கு உபகாரப்படும்
பொருள்தன்மையை உடையதாம் என்றவாறு.

      ‘இலங்கும் அருவித்தே இலங்கும் அருவித்தே
      வானின் இலங்கும் அருவித்தே தான்உற்ற
      சூள்பேணான் பொய்த்தான் மலை.’

கலி. 41



     ’சூளைப் பொய்த்தான்’ என்பதே கூறவேண்டும் பொருள். அதன் புறத்தே ‘இங்ஙனம் பொய்த்தான் மலையகத்து நீர் திகழ் வான் என்? என இறைச்சிப் பொருள் தோன்றியவாறு காண்க.
 

......‘சாரல்

      கருங்கோல் குறிஞ்சி பூக்கொண்டு
     பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.’

குறுந். 3



இதில் நாட்டிற்கு அடையாகி வந்த குறிஞ்சிப்பூவும் தேனும் இறைச்சிப்பொருள் என்று கொள்க.

216

விளக்கம்


     இறைச்சி என்ற சொல்லே கருப்பொருள் என்னும் பொருளது.

     உபமானத்தைக்கொண்டு இதன்கண் உபமேயத்தைக் காண்பது இயலாது.