இலங்கும் அருவித்து’--
தான் சொல்லிய சொல்லைக் காப்பாற்றாது பொய் கூறியவன் மலை
விளங்கும் அருவியை உடையது; மழை பெய்தலான் விளங்கும் அருவியை
உடையது.
‘தலைவனோ தான் சொன்ன சொல்லைத் தவறியவன் என்று கருதுகிறோம்.
சொன்னசொல் தவறியவன் வாழுமிடத்தில், இயற்கை வளம் தாராது
பொய்த்துவிடும். ஆனால் அவன் மலையிலோ மழைபெய்தலான் அருவிநீர்
ஓடி வருகிறது. இதனை நோக்க, அவன் பொய்த்திலன்போலும். அவனைப்
பொய்யனாக் கருதியது நம்தவறே’ என்று இறைச்சி போந்த பொருளாகக்
கொள்ளக்கிடக்கிறது.
நீர் திகழ்வான் என்--கார்மேகம் தங்கி மழை பெய்வது எதனால்?
‘சாரல் கருங்கோல்’--
பக்கமலையிலே கரிய கிளைகளைஉடைய குறிஞ்சிச்செடியின்
பூக்களைத்
துய்த்துத் தேன் நுகர்ந்து தேனீக்கள் பெரிய தேன் கூடு கட்டும்
நாடனுடைய
நட்பு.
‘பலபூக்களைப் பலகாலும் ஊதிப் பலதேனீக்கள் பல நாள் கூடித்
தேன்கூட்டைப் பெரிதாக அமைக்கும் நாடனாயிருந்தும், அவனிடத்தில்
பலநாளும் பலகாலும் பழகி முதிரவேண்டிய நட்பு, அவனைக் கண்ட
ஞான்றே நிலத்தினது அகலம் போலவும் வானினது ஓக்கம் போலவும்
கடலினது ஆழம் போலவும் ஆழ்ந்து அகன்று உயர்ந்துவிட்டமை
வியப்பிற்கு உரியது’ என்று கொள்வது இறைச்சி.
ஒத்த நூற்பாக்கள்
‘இறைச்சி தானே பொருட்புறத் ததுவே.’
தொல். பொ. 229 |