அகத்திணையியல்--நூற்பா எண் 216,217887

 

     இறைச்சியில் பிறக்கும் பொருளுமார் உளவே
     திறத்துஇயல் மருங்கின் தெரியு மோர்க்கே.’

230


     ‘அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டலும்
     வன்புறை ஆகும் வருந்திய பொழுதே’

231


     ‘கருப்பொருள் பிறக்கும் இறைச்சிப் பொருளே.’

ந. அ. 240

     ‘கருப்பொருள் களனாம் கட்டுரை பயின்ற
     பொருட்புறத் தனவாம் இறைச்சிப் பொருள் அணி.’


மா. அ. 176
216

சிறப்புடைய கைக்கிளை


589  காமம் சாலா இளமை யோள்வயின்
     ஏமம் சாலா இடும்பை எய்தி
     நன்மையும் தீமையும் என்றுஇரு திறத்தான்
     தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச்
     சொல்லெதிர் பெறாஅன் சொல்லிஇன் புறுதல்
     புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.


      இஃது ஒருதலைக்காமப் பொருண்மைத்தாக மேல் கூறிப்போந்த
கைக்கிளைக்குச் சிறந்த பொருள் இஃது என்பதோர் ஒழிபு கூறுகின்றது.

      (இ-ள்) காமக் குறிப்பிற்கு அமைதியில்லாத இளமைப்பிராயத்தாள்
ஒருத்திகண்ணே ஒருதலைவன் ‘இவள் எனக்கு மனைக் கிழத்தியாக யான்
கோடல்வேண்டும்’ எனக்கருதி, மருந்து பிறிது இல்லாப் பெருந்துயர் எய்தி,
நன்மையும் தீமையும் என்கின்ற இரண்டு கூற்றான் மிகப் பெருக்கிய
சொற்களைத் தன்னோடும் அவளோடும் கூட்டிச் சொல்லி, அச் சொல்லிற்கு
எதிர்மொழி பெறாதே பின்னும் தான் சொல்லி இன்புறுதல் பொருத்தித்
தோன்றும் கைக்கிளைக் குறிப்பு என்றவாறு.