அவளும் தமரும் தீங்கு செய்தாராக
அவளோடு தீங்கைப் புணர்த்தும், தான்
ஏதம் செய்யாது தீங்கு பட்டானாகத் தன்னோடு நன்மையைப் புணர்த்தும்
என நிரல்நிறையாக உரைக்க. இரு திறத்தால் தருக்கிய எனக் கூட்டுக.
எடுத்துக்காட்டு:
வாருறு வணர்ஐம்பால் வணங்குஇறை நெடுமென்தோள்
பேர்எழில் மலர் உண்கண் பிணைஎழில் மான்நோக்கின்
கார்எதிர் தளிர்மேனிக் கவின்பெறு சுடர்நுதல்
கூர்எயிற்று முகைவெண்பல் கொடிபுரை நுசுப்பினாய்!
நேர்சிலம்பு அரிஆர்ப்ப நிரைதொடிக்கை வீசினை
ஆருயிர்வௌவிக்கொண்டு அறிந்துஈயாது இரப்பாய்கேள்;
(இது தரவு)
உளனாஎன் உயிரைஉண்டு உயவுநோய் கைம்மிக
இளமையான் உணராதாய் நின்தவறு இல்லானும்
களைநர்இல் நோய்செய்யும் கவின்அறிந்து அணிந்துதம்
வளமையால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்;
நடைமெலிந்து அயர்வுறீஇ நாளும்என் னலியும்நோய்
மடமையான் உணராதாய் நின்தவறு இல்லானும்
இடைநில்லாது எய்க்கும்நின் உருஅறிந்து அணிந்துதம்
உடைமையால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்;
அல்லல்கூர்ந்து அழிவுற அணங்காகி அடரும்நோய்
சொல்லினும் அறியாதாய் நின்தவறு இல்லானும்
ஒல்லையே உயிர்வௌவும் உருஅறிந்து அணிந்துதம்
செல்வத்தால் போத்தந்த நுமர்தவறு இல்என்பாய்;
(இவை மூன்றும் தாழிசை)
என ஆங்கு (தனிச்சொல்)
ஒறுப்பின்யான் ஒறுப்பது நுமரையான் மற்றிந்நோய்
பொறுக்கலாம்வரைத்தன்றிப்பெரிதாயின், பொலங்குழாய்! |