மறுத்து இவ்வூர் மன்றத்து
மடலேறி
நிறுக்குவென் போல்வென்யான் நீபடு பழியே.
(இது சுரிதகம்)
எனவரும்.
கலி. 51
அவளைச் சொல்லுதலே தனக்கு
இன்பம் ஆகலின் ‘சொல்லி
இன்புறல்’ என்றார். இது ‘புல்லித் தோன்றும் கைக்கிளை’
எனவே,
காமஞ்சான்ற இளமையோள்கண் நிகழும் கைக்கிளை இத்துணைச்
சிறப்பின்று ஆயிற்று.
அஃது அசுரம் முதலிய மூன்றும் ஆம்.
இயற்கைப்புணர்ச்சிக்கு முன் நிகழும் காட்சி முதலிய நான்கும்
காமம் சான்ற
இளமையோள்வயின் கைக்கிளை ஆமேனும் நற்காமத்துக்கு இன்றியமையாது
வருதலின், ஈண்டுக் கூறிய, சிறப்புடைக் கைக்கிளையாதற்கு உரிமை
உடையவாயின; என்னை?
‘முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப’
தொல்.பொ. 55
என்ப ஆகலின்.
‘குறிப்பு’ என்றதனால், சொல்லி இன்புறினும், தலைவன் குறிப்பு
நிகழ்ந்தது புறத்தார்க்குப்
புலனாகாது என்பதூஉம், அகத்து நிகழ்ச்சி அறியும்
மனைவியர்க்காயின் புலனாம் என்பதூஉம்
கொள்க.
217
விளக்கம்
நூற்பா தொல், பொ. 50.
உரை விளக்கம் நச்சினார்க்கினியர்
ஆண்டுச் சொற்றனவே.
முதியவன் பேதைமாட்டுக் காதல் கொள்வது என்றும்
கைக்கிளையாகவே போதலின், இது சிறப்புடைய
கைக்கிளை ஆயிற்று.
இயற்கைப் புணர்ச்சிக்கு முன் நிகழும் கைக்கிளை
112 |