செல்பவளே! நின் மெல்லிடைகண்டும்
அதற்குமேல் வனப்புறுத்தித் தம்
செல்வச்செருக்கால் உன்னைப் புறம் போக விட்ட நுமர்மேல் தவறு
இல்லையோ?
துயரம் மிக்கு யான் வருந்துமாறு செய்வித்த காமநோயை யான்
வெளிப்படையாகக் கூறினும் அறியாதவளே! உன் தவறு
இல்லாமலிருக்கலாம்.
உயிரை வாங்கும் இயற்கை அழகுக்கு மேலே உனக்கு
அணிசெய்து
புறம்போக வைத்த நுமர் தவறு அற்றவர் என்று கூறல்
இயலுமா?
எனவே, யான் நுமரையே ஒறுத்தல் வேண்டும். ஆனால்
அக்காமநோய்
மிகின், யான் இவ்வூர் மன்றத்தில் மடல்ஏறி நினக்குப்
பழியை நிலைநிறுத்தும் நிலையும்
ஏற்படலாம்.’
ஒத்த நூற்பாக்கள்
முழுதும்--
தொல். பொ. 50
‘காமம் சாலா இளமை யோள்வயின்
குறிப்புஅறி வுறாது குறுகிஆங்கு அவளோடு
இறப்பக் கூறுவது அகப்புறக் கைக்கிளை.’
ந, அ. 241
217
சிறப்புடைய கைக்கிளைக்கு உரியார்
அதுவே,
590 இறைமையி லோர்க்கும் இழிகுலத் தோர்க்கும்
முறைமையின் உரித்தே முன்னுங் காலை.
இஃது அஃது இத்தன்மையோர்க்கு உரித்து என்கின்றது.
(இ-ள்) மேற்கூறிய கைக்கிளைதான் தலைமைப்பாடு இல்லாதார்க்கும்
இழிகுலத்தார்க்கும் முறைமையான் உரித்தாம் ஆராயுங்காலத்து என்றவாறு. |