‘முன்னுங்காலை’ என்றதனான்
இது பயின்று வாராது எனக்கொள்க.
218
விளக்கம்:
காமம் சாலா இளமையோள்வயின் முதியோன் காமப்பிணி கூர்தல்
பொதுவான உலகியலுக்கு மாறானது ஆதலின் இத்தகைய கைக்கிளை
சிறுபான்மையது என்பதும், இது மக்களிடை மதிப்பு இல்லாதாருக்கும்
பரம்பரையாக இழிவுபட்ட குடும்பத்தைச் சார்ந்தாருக்குமே உரித்து என்பதும்
கொள்ளப்பட்டன. பொதுவாகக் கைக்கிளை பெருந்திணைகள்
அடியோர்களுக்கும், கூலிவேலை செய்பவருக்குமே உரியன என்பது
தொல்காப்பியனார் கருத்து ஆதல்,
‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்
கடிவரை இலபுறத்து என்மனார் புலவர்.’
தொல். பொ. 23
என்பதனால் உணரப்படும்.
ஒத்த நூற்பா
முழுதும்--
ந. அ. 242
218
சிறவாத பெருந்திணை
வகை
591 ஏறிய மடல்திறம் இளமை தீர்திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.
இது பொருந்தாக்காமப் பொருண்மைத்தாக மேல் கூறிப் போந்த
பெருந்திணைக்குப் பொருள் இவை என்பதோர் ஒழிபு கூறுகின்றது.
(இ-ள்) மடன்மாக் கூறுதலன்றி மடலேறுதலும், தலைவற்கு இளையள்
ஆகாது
ஒத்த பருவத்தாள் ஆதலும், இருபத்து நான்காம் மெய்ப்பாட்டின்
இகந்து
ஏழாம் |