அகத்திணையியல்--நூற்பா எண் 219893

அவத

அவத்தை முதலாக வரும் அறிவு அழி குணன் உடையள் ஆதலும்,
காமமிகுதியானே எதிர்ப்பட்டுழி வலிதின் புணர்ந்த இன்பத்தோடே
கூட்டப்பட்டுக் கந்தருவத்துட்பட்டு வழீஇயிற்றாகச் செப்பிய இந்நான்கும்
பெருந்திணைக் குறிப்பாம் என்றவாறு,

     மடன்மாக் கூறுதல் கைக்கிளையாம். ‘மடல்திறம்’ என்றதனான், அதன்
திறமாகிய வரைபாய்தலும் கொள்க. ‘இளமைதீர்திறம்’ என்றதனால்,
தலைவன் முதிர்ச்சியும் இருவரும் முதிர்ந்த பருவத்தும் துறவில் சேறலன்றிக்
காமம் நுகர்தலும் கொள்க.

எடுத்துக்காட்டு:

      ‘சான்றவிர்! வாழியோ சான்றவிர்! என்றும்
      பிறர்நோயும் தம்நோய்போல் போற்றி அறனறிதல்
      சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால், இவ்விருந்த
      சான்றீர்! உமக்குஒன்று அறிவுறுப்பென்; மான்ற
      துளியிடை மின்னுப்போல் தோன்றி ஒருத்தி,
      ஒளியோடு உருஎன்னைக் காட்டி, அளியஎன்
      நெஞ்சுஆறு கொண்டாள் அதற்கொண்டு துஞ்சேன்
      அணிஅலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின்
      பிணியலங் கண்ணி மிலைந்து மணிஆர்ப்ப
      ஓங்கிரும் பெண்ணை மடல்ஊர்ந்துஎன் எவ்வநோய்
      தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பாக,
      வீங்குஇழை மாதர் திறத்துஒன்று, நீங்காது
      பாடுவென், பாய்மா நிறுத்து.


      ‘யாமத்தும் எல்லையும் எவ்வத் திரைஅலைப்ப
      மாமேலேன் என்று மடல்புணையா நீந்துவேன்;
      தேமொழி மாதர் உறாஅது உறீஇய
      காமக் கடலகப் பட்டு;

      உய்யா அருநோய்க்கு உயலாகும்; மையல்
      உறீஇயாள் ஈத்தஇம் மா.